Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 நவம்பர், 2019

வீடுகள் விற்பனை கடும் வீழ்ச்சி: சென்னையின் நிலை என்ன?

வீடுகள் விற்பனை 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



9 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 52,855 ஃப்ளாட்டுகள் மட்டுமே.
சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருந்துவருகிறது. தண்ணீர்ப் பிரச்னை, கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் ரியல் எஸ்டேட் துறையைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கின.
இந்நிலையில் ப்ரோ ஈக்விட்டி, டேட்டா ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை 9.5% குறைந்துள்ளது எனவும், 9 முக்கிய நகரங்களில் 52,855 ஃப்ளாட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருப்பதாகவும், வீடுகளுக்கான தேவை குறைந்து காணப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
பொருளாதார மந்தநிலை, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் இருப்பது மற்றும் வீடுகள் வாங்குவதற்கான ஆர்வம் மக்களிடம் குறைவாக இருப்பதும் இதற்கு மிக முக்கியக் காரணங்கள்
சென்னை நகரத்தில் மட்டும் வீடுகள் விற்பனை வீழ்ச்சி விகிதம் 25 சதவிகிதமாக இருக்கிறது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 3,060 ஃப்ளாட்டுகள் மட்டும் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 4,080 ஃப்ளாட்டுகள் விற்பனையாகியிருந்தன. சென்னைக்கு அடுத்த இடத்தில் மும்பை 22 சதவிகித வீழ்ச்சி விகிதத்துடன் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஹைதராபாத், (16%) 4-வது இடத்தில் கொல்கத்தா (12%), 5 மற்றும் 6-வது இடத்தில் நொய்டா (11%) மற்றும் பெங்களூரு (9%) ஆகிய நகரங்கள் இருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட 7 நகரங்களில் விற்பனை வீழ்ச்சியில் இருந்தாலும், குருகிராம் மற்றும் புனே நகரத்தில் வீடுகள் விற்பனை அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், 1,190 ஃப்ளாட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில், 1,112 ஃப்ளாட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக