இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இப்போது
வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில்
தான் இருக்கிறது, அதன்படி மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டே பயன்படுத்தம் வகையிலான
சக்கர நாற்காலியை செனை ஐஐடி வடிவமைத்துள்ளது.
குறிப்பாக
நின்றவாறு பயணிக்க இது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக மாற்றுத்திறனாளிகள்
கூறுகின்றனர். பெரும்பாலும நடக்க இயலாத மாற்றுதிறனாளிகள் சக்கர நாற்காலியை
பயன்படுத்தி வருகின்றனர், இதனை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடி மாணவர்கள்,
மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்கும் வகையிலான சக்கர நாற்காலியை வடிமைத்துள்ளனர்.
மாணவர்கள்
கண்டுபிடித்த இந்த சக்கர நாற்காலியை மத்திய அமைச்சர் தாவர்சந்த கெஹ்லோத் சென்னை
தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் வடிவமைத்த சக்கர
நாற்காலியை பீனிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.
மாணவர்கள்
உருவாக்கிய இந்த வீல் சேர் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும்,
எப்போதுமே அமர்ந்து கொண்டே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து மாற்றம்
ஏற்பட்டுள்ளதாகவும் மாற்றுதினாளிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக வாழ்வில் மாற்றம் ஏற்படும்
என்ற நம்பிக்கை பிறக்கிறது என்றும், மிக மிக பயனுள்ளதாக வீல் சேர் வடிவமைக்க்பட்டுள்ளது
என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும்
பீனிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் உருவாக்கிய இந்த சக்கர
நாற்காலியை மானிய விலையில் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தாவர்சந்த
கெஹ்லோத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக