Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 12 நவம்பர், 2019

குளிகை நேரத்தில் தங்க நகை வாங்கலாம்... நகை அடகு வைக்க கூடாது - ஏன் தெரியுமா?

 Image result for குளிகை நேரத்தில் தங்க நகை வாங்கலாம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தங்க நகை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். ஆணோ, பெண்ணோ இன்றைக்கு அனைவருமே நகை அணிகின்றனர். தங்கம் ஆபரணம் என்பதை விட முதலீடு செய்ய ஏற்றது எனவேதான் தங்கம் வாங்குகின்றனர். தங்க வாங்க குளிகை காலம் ஏற்றது என்கின்றனர். குளிகை காலத்தில் எந்த நல்லது செய்தாலும் அது மீண்டும் மீண்டும் நடக்குமாம் எனவேதான் இந்த நாளில் நகை அடகு வைப்பதோ, விற்பதோ கூடாது என்கின்றனர். ராகு காலம் எமகண்டம் போல குளிகை காலத்திற்கு எப்படி முக்கியத்துவம் வந்தது என்று பார்க்கலாம்.
 சனி, ஜேஷ்டாதேவியின் மைந்தன் குளிகன். இவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு என்கிறது புராணம். குளிகனின் பெயரால் குளிகை காலம் உள்ளது. இது காரியசித்திக்கு ஏற்ற நேரம். இந்த நேரத்தில் செய்யத் தொடங்கும் செயல்கள் திரும்ப திரும்ப நடைபெறும். குளிகை காலத்தில் நல்லவை செய்தால் திரும்ப திரும்ப நல்லது நடைபெறும். கடன் திரும்ப கொடுக்கலாம். அடகு வைத்த நகையை திருப்பலாம். சொத்து, வீடு வாங்கலாம். அதே நேரம் பிறந்தநாள் கொண்டாடினால் காலா காலத்திற்கும் பிறந்தநாள் கொண்டாடலாம்.
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான். யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம்* *கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான். அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், "கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்.."என்று யோசனை கூறினார். உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்.
சிறையில் நவ கிரகங்கள்
ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர். அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள். வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை.
சுக்கிராச்சாரியார் ஆலோசனை
இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று நவகிரகங்களும் பயந்தனர். இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றார்.
குளிகன்
அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம் என்றார். சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும் படி செய்தார்.சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது.
மேகநாதன்
குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தது. குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான் என்பதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடைமழை பெய்தது. அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான்.
இந்திரஜித்
இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது. குளிகை நேரத்தை, காரிய விருத்தி நேரம் என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார்.
குடும்பம் செழிக்கும்
அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது. குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப் பட்டான். குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும். நகை அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது.
தினசரி குளிகை நேரங்கள்:
குளிகை நேரம் : பகல்
ஞாயிறு: 03.00 - 04.30
திங்கள் : 01.30 - 03.00;
செவ்வாய் : 12.00 - 01.30
புதன்: 10.30 - 12.00
வியாழன் 09.00 - 10.30
வெள்ளி : 07.30 - 09.00
சனி: 06.00 - 07.30


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக