Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 நவம்பர், 2019

ஸ்ரீபஞ்சநதீஸ்வரஸ்வாமி திருக்கோவில் திருவையாறு

 Image result for ஸ்ரீபஞ்சநதீஸ்வரஸ்வாமி திருக்கோவில்  திருவையாறு



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


திருவையாறு பெயர்க்காரணம் :

திருநந்தி தேவருக்கு ஐயாறப்பர் கங்கை நீர், பிரமங்கமண்டல நீர், அம்மையின் கொங்கை பால் மேகத்தின் நீர், ரிஷப நந்தியின் வாய்நுரை நீர் ஆகிய ஐந்து நீரினால் அபிஷேகம் செய்வித்து அவை காவிரியில் கலந்த உடன் திருவையாறு ஆகா புராணங்கள் கூறுகின்றன.

சுவாமி : பஞ்சநதீஸ்வரஸ்வாமி.

தீர்த்தம் : காவேரி தீர்த்தம், சூரியபுஷ்கரணி(அயனரி தீர்த்தம்), நந்தி தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தல வரலாறு :

 திருஐயாறு, ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப்பெயர் பெற்றது. சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் (ஜப்பேச மண்டபம்) செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

 இத்திருக்கோவில் முதன் முதலாக 'பிரியவிரதன்" எனும் சூரிய வம்ச சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு. கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசன் 'கரிகாற்பெருவளத்தான்" இவன் காடு கெடுத்து நாடாக்கி வளம் பெருக்கியவன், கல்லணை கட்டி, காவிரிக்கு கரை எழுப்பி, இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில், ஐயாற்றை அடைந்ததும், அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை.

 'இதன் அடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது" என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான். அடியில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள், சண்டர், சூரியன் திருவுருவங்களும் யோகி ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றி காணப்பட்டன.

 மேலும் அகழவே, நியமேசர் எனும் அகப்பேய் சித்தர் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம், 'தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட மகாலிங்கத்திற்கும் கோவில் எடுப்பாயாக" எனக் கூறி எவராலும் வெல்லற்கரிய தண்டமொன்றும் அளித்து கோவில் கட்டுவதற்கு வேண்டிய பொருளும் நந்தியின் குலம் படியில் கிடைக்குமென அருள் புரிந்தார். அது போலவே கரிகாற்சோழன் சிறப்பாக கோவில் கட்டி, குடமுழுக்கும் செய்து, நிவந்தங்களும் அளித்தான்.

 கரிகாற் சோழனுக்கு ஐயாறப்பரே என்ற எல்லாம் வல்ல சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில் கட்ட செய்தான். ஆதரமாக, கர்ப்பகிரகத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்ககூடாது என்பதும், சோழனால் கட்டப்பட்ட செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாகி இருப்பதும் கரிகாலசோழன், அவர் மனைவி, இருவரின் சிலைகள் இருப்பதும் கண்டு உணரலாம்.

தலச்சிறப்பு :

 காசிக்குச் சமமான தலங்ககளான, திருவாஞ்சியம், திருவெண்காடு, திருவையாறு, திருமயிலாடுதுறை, திருவிடை மருதூர், திருச்சாய்க்காடு ஆகிய ஆறு தலங்களில் இத்தலமும் ஒன்றாகப் போற்றப்படும் சிறப்பு உடையது.

 இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம்.

 அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம். சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

 இத்திருக்கோவிலுள் ஐயாறப்பர் கோவில், தென் கயிலைக் கோவில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோவில்கள் உள்ளன.

நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக