இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
யாராவது ஏதாவதொரு கேள்வி கேட்டு,
அதற்கு பதில் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வோம்? உடனடியாக கூகுள் செய்வோம், அப்படித்தானே?
இப்படியாக நமக்கு தெரியாத விஷயங்களின் பதில்களை அறிய உடனடியாக ‘கூகுளிங்’ செய்து பார்க்க
நம்மில் பெரும்பாலோர் பழகிவிட்டோம். பச்சரிசி பாயசம் வைப்பது எப்படி என்பது தொடங்கி
ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஆன்லைன் பேங்கிங் வழியாக பரிமாற்றம் செய்வது வரை அல்லது மருந்துகளை
வாங்குவது வரை அனைத்தையும் ‘கூகுள்’ வழியாக செய்யவே நாம் முனைகிறோம்.
ஆனால் நம்மில் பெரும்பாலான மக்கள்
ஒரு குறிப்பிட்ட விடயத்தை மறந்து விடுகிறார்கள். அதாவது, கூகுள் என்பதும் ஒரு ஆன்லைன்
தளம்தான், கூகுள் ஒன்றும் அதன் சொந்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை. அங்கே உங்களுக்கு
தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்கள் உள்ளது,
அவ்வளவுதான்! அதாவது"ஆன்லைன்
ஆபத்துகள்" என்கிற பட்டியலின் கீழ் உள்ள அத்துணை "ஆப்புகளும்" கூகுளிலும்
உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் இதுபோன்ற ஆப்புகளில் அல்லது ஆபத்துகளில் சிக்கி
கொள்ளாமல் இருக்க விரும்பினால் எக்காரணத்தை கொண்டும் கூகுள் வழியாக இந்த 12 மேட்டர்களையும்
தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்! மீறி தேடினால், பிறகு நாங்கள் பொறுப்பில்லை!
01. கூகுள் வழியாக ஆன்லைன் பேங்கிங் தளங்களை தேட வேண்டாம்!
ஒருவேளை உங்கள் வங்கியின் சரியான
அதிகாரப்பூர்வ URL ஆனது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை கண்டுபிடிக்க வெறுமனே
உங்கள் வங்கி பெயரை டைப் செய்து ஆன்லைன் பேங்கிங் என்று தேடுவதை தவிர்க்கவும்.
ஏனெனில் கூகுளில் பல போலியான ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்கள் உள்ளன.
பெரும்பாலான போலியான வலைத்தளங்கள் ஆனது
குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் என்பதையும்
கவனத்தில் கொள்ளுங்கள். ஆக உங்கள் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உங்கள்
வங்கியின் அதிகாரபூர்வமான ஆன்லைன் வங்கி போர்ட்டலின் URL ஐ கூகுளில் உள்ளிடவும்.
இல்லையெனில் ஃபிஷிங் போன்ற ஆன்லைன் திருடர்களின் கைகளில் தானாகவே போய்
சிக்கிகொள்வீர்கள்.
02. கூகுள் வழியாக கஸ்டமர் கேர் எண்களை தேட வேண்டாம்!
03. ஆப்ஸ் மற்றும் சாப்ட்வேர் டவுன்லோட்டிற்காக கூகுளை அணுக வேண்டாம்!
04. மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை கூகுளில் தேட வேண்டாம்!
மஞ்சள் தூளை பாலில் போட்டு குடித்தால் பறந்து போகும் சாதாரணமான சளிப்பிரச்சனையை கூட கேன்சர் என்று கூகுள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக எக்காரணத்தை கொண்டும் கூகுளில் நோய் சார்ந்த விடயங்களை பற்றி தேட வேண்டாம், தேடிப்பிடித்தாலும் அதை உண்மையென நம்பவும் வேண்டாம். குறிப்பாக நீங்கள் கண்டறிந்த தகவல்களின் அடிப்படையில் மருந்துகளை வாங்க வேண்டாம்.
05. ஊட்டச்சத்து அல்லது எடை குறைப்பு பற்றிய மருத்துவ ஆலோசனைகளை கூகுள் வழியாக தேட வேண்டாம்!
ஏனெனில் ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது, கூகுள் ஆனது பொதுவான வழிமுறைகளை மட்டுமே மற்றும் பொதுவான ஆலோசனைகளை மட்டுமே வழங்கும். குறிப்பிட்ட வழிமுறையோ அல்லது ஆலோசனையோ உங்கள் உடலுக்கு 'செட்' ஆகாவிட்டால், பக்க விளைவுகளும் அதன் வழியிலான மருத்துவர் சந்திப்பும் அதன் வழியிலான செலவும் நிச்சயமாக நடக்கும்!
06. கூகுள் வழியாக நிதி மற்றும் பங்குச்சந்தை சார்ந்த தீவிரமான ஆலோசனை அல்லது வழிகாட்டியை தேட வேண்டாம்!
மருத்துவ ஆலோசனைகளை போலே, நிதி சார்ந்த
விடயங்களும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும், ஏனெனில் எல்லோருமே ஒரே மாதிரியான
சம்பளத்தை வாங்குவதில்லை. ஒரே நேரத்தில் அனைவரையுமே பணக்காரர்களாக மாற்றும் ஒரு
முதலீட்டுத் திட்டம் என்பது இந்த உலகத்திலேயே கிடையாது, ஒருபோதும் இருக்கவும்
முடியாது. ஆக, முதலீடு சார்ந்த முடிவுகளை கூகுள் தேடல் வழியாக நிகழ்த்தும் பழக்கம்
உங்களுக்கு இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு படித்த முட்டாளாகத்தான் இருக்க
வேண்டும் (மீண்டும் மன்னிக்கவும்)!
07.கூகுள் வழியாக அரசாங்க வலைத்தளங்களைத் தேட வேண்டாம்!
08. கூகுள் வழியாக சோஷியல் மீடியாக்களுள் லாகின் செய்யாதீர்கள்!
09. கூகுள் வழியாக ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் அல்லது சலுகைகளை தேட வேண்டாம்!
இதில் மக்கள் தங்கள் ஆன்லைன் வங்கி உள்நுழைவு விவரங்களை இழக்க நேரிடுகிறது. பெரும்பாலான மக்கள் இப்படியான தீங்கிழைக்கும் வலைத்தளங்களைக் கிளிக் செய்வதற்கான முக்கியமான காரணாம் - கவர்ச்சிகரமான ஒப்பந்தங்கள் தான்!
10. கூகுள் வழியாக இலவச ஆன்ட்டி-வைரஸ் ஆப்ஸ் அல்லது சாப்டவேர்களை தேட வேண்டாம்!
இலவசம்
என்பது ஒரு மெல்லிய கோடு என்பதையும், எந்தவொரு வியாபாரியும் எதையுமே இலவசமாக
கொடுப்பதில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியானதொரு தந்திரம்
மிக்க வியாபார உலகில், ஆன்லைன் வழியாக அதுவும் கூகுள் தேடல் வழியாக இலவச வைரஸ்
தடுப்பு பயன்பாடுகள் அல்லது மென்பொருளைத் தேடுவதென்பது எங்கு சென்று முடியும்
என்று தெரியுமா? - போலியான தயாரிப்புகளை டவுன்லோட் செய்து டேட்டாவை இழப்பீர்கள்
அல்லது கிளிக் செய்து-கிளிக் செய்து ஏதோவொரு மோசடிக்காரன் பணம் சம்பாதிப்பதற்கு
உதவுவீர்கள்.
11. ஆன்லைனில் ஷாப்பிங்கிற்கான தள்ளுபடி கூப்பன் குறியீடுகளை கூகுளில் தேட வேண்டாம்!
12. கூகுள் வழியாக ஆபாசமாக எதையும் தேட வேண்டாம்!
கூகுள் விளம்பரங்கள் எவ்வாறு
செயல்படுகின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அறியாதவர்களுக்கு, கூகுளில் நீங்கள்
தேடிய "மேட்டர்கள்" ஆனது, பிற்காலத்தில் நீங்கள் பார்வையிடும் மற்ற வலைத்தளங்களில்
விளம்பரமாக காட்சிப்படும். அதாவது உங்கள் கூகுள் தேடல் வரலாற்றின் அடிப்படையின்கீழ்
உங்களுக்கான விளம்பரங்கள் ஆனது பரிந்துரைக்கபப்டும் என்று அர்த்தம். ஆக நீங்கள் அலுவலகத்தில்
இருக்கும் போது அல்லது குடும்பத்தினரின் முன்னால் இருக்கும் போது உங்களின் "ஆபாச
தேடல்"களானது விளம்பரமாக எழாமல் இருக்க வேண்டும் என்றால், கூகுள் வழியாக ஆபாசமாக
எதையும் தேட வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக