இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மும்பை: எந்த ஒரு தொழிலானாலும் அதில் கொடிக்
கட்டி பறப்பது முகேஷ் அம்பானியின் வழக்கம். அதிலும் நாட்டில் நிலவி வரும் மோசமான
பொருளாதார நிலையிலும் கூட, உலக பில்லியனர்களில் ஒருவராக தேர்தெடுக்கப்பட்டவர் தான்
முகேஷ் அம்பானி..
ஒரு புறம் தனது அதிரடியான சலுகையினால், மற்ற
தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆட்டம் காண செய்தவர். இன்றைய நிலையில் தொலைத் தொடர்பு
சந்தையில் குறிப்பிட்ட பங்குகளை தன்னகத்தே கொண்டவர் தான் முகேஷ் அம்பானி.
அந்த வகையில் தற்போதும் கல்வித்துறையிலும் கால்
பதிக்க உள்ளார். இதற்காக அறிவிப்புகள் பல வருடங்களாக இருந்து வருகிறது.
உலகளாவிய ஆலோசனைக் குழு
இந்த நிலையில் 2021ம் ஆண்டு முதல் ஜியோ
பல்கலைக் கழகம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
நிறுவனம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட உலகலாவிய ஆலோசனைக் குழு ஒன்றை
உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஜியோ பல்கலைக் கழகம் தற்போது என்னென்ன பட்ட
படிப்புகள் இருக்கும் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு குழுவில் யார் யார்?
உலகளவில் தங்களது தரத்தினை உயர்த்திக் கொள்ள
நிபுணர்களை கொண்டு சில செயல்களை நடைமுறைப்படுத்து வருகிறதாம். இந்த உலகளாவிய
குழுவில் கலிப்போர்னியாவைச் சேர்ந்த கலிப்போர்னியா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இன்
தலைவர் ஜீன் லூ சாமியோ, யால் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தலைவர் ரிக் லெவின்,
சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்ப பல்கலைகழகத்தின் தலைவர் சுப்ரா சுரேஷ், மைக்கேல்
கெல்லர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் துணிய புரோவோஸ்ட், Nadhmi A Al-Nasrன்
தலைமை செயல் அதிகாரி பிராங்க் ஜே முல்ஹெர்ன் மற்றும் விநாயக் பி டிராவிட் உள்ளிட்ட
பல முக்கிய தலைகள் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் குடும்ப உறுப்பினர்கள்
இவர்கள் தவிர ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்
முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, மகள் இஷா அம்பானி பிரமல் ஆகியோரும்
இந்த சபையின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதெ டாடா
குழுமத்தின் முன்னாள் நிர்வாக அறங்காவலர் ஆன ஆர் வெங்கடரமனன் சலூம முயற்சிகளுக்கு
தலைமை தாங்குவார் என்றும் கருதப்படுகிறது. மேலும் அகமதாபாத்தில் உள்ள சி.இ.பி.டி
பல்கலைக் கழகத்தின் தலைவரும் இயக்குனருமான பிமல் படேல் புதுடெல்லியில் உள்ள மத்திய
விஸ்டாஅவை மறுவடிவமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்கலைக் கழகம் எங்கு?
அண்மையில் வெளியான அறிக்கையின் படி, நவி
மும்பையில் 40,000 சதுரடி அடி பரப்பளவில் ஜியோ பல்கலைக் கழகம் பரப்பப்படும்
என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் திறமை வாய்ந்த நிபுணர்களைக்
கொண்டு செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக சிறந்த பேராசிரியர்களை தேர்தெடுக்க
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரி என்னென்ன படிப்புகள்? இதன் முதலாம் ஆண்டு
கல்வியாண்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல்
மற்றும் டிஜிட்டல் மீடியா (data science and digital media), இளங்கலை
பட்டாதாரிகளுக்கான ஒருங்கிணைத்த சந்தைப்படுத்துதல் (integrated marketing
communication) உள்ளிட்ட இளங்கலை படிப்புகள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் முதுநிலை படிப்புகள் குறித்த எந்த அறிக்கையும் இதுவரை எதுவும்
வெளியிடப்படவில்லை.
இதெல்லாம்
மையாகக் கொண்டிருக்கும்
மருத்துவம், கலைகள் மற்றும் விளையாட்டு
மையமாகக் ஜியோ பல்கலைக் கழகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பல்கலைக்
கழகம் செயல்பாட்டிற்கு வராத முன்பே கடந்த 2018ம் ஆண்டு சிறந்த பல்கலைக் கழகம் என்ற
பெயரினை பெற்றது குறிப்பிடத்தக்கது. இது உலகளாவிய தரவரிசையில் ஒரு அடையாளத்தை
உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக