இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவின்
மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று எப்போதும் இல்லாத
வகையில் மிகப்பெரிய அளவில் பங்குகளை விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் தனது
பெட்ரோலிய வர்த்தக நிறுவனப் பங்குகளைச் சவுதி நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்
நிறுவனமான ஆராம்கோ-விற்கு விற்பனை செய்த நிலையில் தற்போது தனது டிவி வர்த்தகத்தை
விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.
மாஸ்டர் பிளான்
முகேஷ்
அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் நெட்வொர்க்18 மீடியா மற்றும்
இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின்
வர்த்தகத்தைப் பல மடங்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட முகேஷ்
அம்பானி பெரிய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கத் திட்டமிட்ட நிலையில் பல முக்கிய
நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார்.
ஜப்பான் நிறுவனம்
தென் ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த
வேண்டும் என நீண்ட நாள் கனவுடன் இருக்கும் சோனி நிறுவனத்திற்கு முகேஷ் அம்பானியின்
முடிவு சாதகமாக முடிந்துள்ளது.
ஜப்பான் நிறுவனமான சோனி கார்ப்
இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்த முகேஷ் அம்பானியின் நெட்வொர்க்18
நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முக்கியமான முடிவுகள்
இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான
பேச்சுவார்த்தை ரகசியமாக வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது தகவல் கசியத்
துவங்கியுள்ளது. சோனி நிறுவனம் ஒரு நிறுவனத்தை வாங்க வேண்டும் என்றால் பல தரப்பட்ட
கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. இவை அனைத்தும் ஈடுசெய்யப்பட்டால் மட்டுமே சோனி ஒரு
நிறுவனத்தைக் கையகப்படுத்தும்.
இதேபோல் சோனி, நெட்வொர்க்18 நிறுவனத்தை
வாங்குகிறதா இல்லை தனது இந்திய வர்த்தகத்துடன் இணைக்கிறதா என்பதும் இன்னும் முடிவு
செய்யப்படவில்லை.
பங்குகள் விலை உயர்வு
இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம்
நெட்வொர்க்18 நிறுவனப் பங்குகள் இன்று 10 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வைச்
சந்தித்தது.
இதனால் முதலீட்டாளர்கள் நெட்வொர்க்18
நிறுவன பங்குகளில் அதிகளவிலான முதலீட்டை செய்துள்ளனர். மேலும் சோனி உடனான
ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால் இந்நிறுவன பங்குகள் தனது 52 வார உயர்வை அடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி இலக்கு
இந்தியாவில் தற்போது நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில் சோனி மட்டும் தனக்கான இடத்தைப் பிடிக்காமல் தவித்து வருகிறது. இந்நிலையில் நெட்வொர்க்18 நிறுவனத்தை நிச்சயம் வாங்க சோனி திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த 4 நிறுவனங்களுக்கும் இந்தியாவில் OTT சந்தை தான் மிகப்பெரிய இலக்கு, இப்போது சோனியும் களத்தில் இறங்கினால் போட்டி இன்னும் சூடுபிடிக்கும். அதுமட்டும் அல்லாமல் தற்போது இருக்கும் கட்டணங்கள் அதிகளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக