Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 நவம்பர், 2019

அருள்மிகு விநாயகர் திருக்கோவில் கேரளபுரம்

 Image result for அருள்மிகு விநாயகர் திருக்கோயில் கேரளபுரம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அதிசயத்தின் அடிப்படையில் இங்குள்ள விநாயகர் தை மாதம் முதல் ஆனி வரை வெள்ளை நிறத்திலும், ஆடி முதல் மார்கழி வரை கறுப்பு நிறத்திலும் நிறம் மாறி மாறி காட்சியளிக்கும் அருள்மிகு விநாயகர் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கேரளபுரத்தில் அமைந்துள்ளது.

மூலவர் : விநாயகர்

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

தல வரலாறு :

மன்னன் வீரகேரளவர்மா, ராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக ராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். ராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீரகேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது.

நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள், இது என் பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரளவர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்தார். அது இப்பொழுதும் பராமரித்து வரப்படுகிறது.

தலபெருமை :

மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் வந்து தரிசித்து பேறு பெறுகிறார்கள்.

முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு, தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் கூடுகிறது. இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி உருவாக்கப்பட்ட கல் இந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

தல சிறப்பு :

நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.

பிராத்தனை :

இங்குள்ள விநாயகரை வழிபட வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன் :

இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக