
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ரகு,
அருண் இருவரும் நண்பர்கள். அவர்கள் இருவரும் படுசுட்டி பையன்கள். இவர்கள் ஐந்தாம்
வகுப்பு படித்து வருகின்றனர். ரகுவின் மாமா பட்டணத்தில் வேலை செய்பவர். இவர்
ஞாயிற்றுக்கிழமை அன்று ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தார். மேலும், வரும்போது
பரிசுகள் வாங்கி வருவதாகவும் கூறினார்.
அதனால்,
ரகுவிற்கு ஒரே மகிழ்ச்சி. 'எப்போது ஞாயிற்றுக்கிழமை வரும், மாமா என்ன பரிசு வாங்கி
வருவார்" என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை
விடிந்ததும் ரகு, தன் அம்மாவிடம் கிரிக்கெட் விளையாடச் செல்கிறேன். மாமா
வருவதற்குள் வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சென்றான். தன்னுடன் தன் நண்பன்
அருணையும் மைதானத்திற்கு அழைத்துச் சென்றான்.
அவர்கள்
விளையாடப் போகும் வழியில் மாமரத்தில் நிறைய பழங்கள் காய்த்து தொங்குவதைப் பார்த்தனர்.
ரகு அந்த மாம்பழத்தை 'கல்லால் அடித்து சாப்பிடுவோம்" என்றான். அதற்கு, அருண்
வேண்டாம் என்றான். ஆனால், ரகு மீண்டும் கட்டாயப்படுத்தியதால் இருவரும் மாமரத்தில்
கல்லெறிந்து மாம்பழங்களை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே விளையாடச் சென்றனர்.
இருவரும்
விளையாடிவிட்டு வீடு திரும்பும்போதும், மாம்பழங்கள் ருசியாக இருந்ததால் மீண்டும்
மாமரத்தில் கல்லெறிந்தனர். அப்போது அந்த கல் ஒருவர் மீது பட்டுவிட்டது. உடனே
ரகுவும், அருணும் ஓடிவிட்டனர். யாராவது துரத்துகிறார்களா? என்று திரும்பித்
திரும்பிப் பார்த்துக் கொண்டே வீட்டிற்கு ஓடி சென்றுவிட்டார்கள். வீட்டிற்கு மாமா
வந்திருந்தார். ரகுவிற்கு ஒரே சந்தோம்.
மாமா
ரகுவின் கால்சட்டையின் நிறத்தைப் பார்த்தவுடன், மரத்தில் கல்லெறிந்தது இவன்தான்
என்று கண்டுகொண்டார். என்ன ரகு? கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்தாச்சா? உன்னிடம்
ஒன்று கேட்க வேண்டும். 'நீ இன்று ஏதாவது தவறு செய்தாயா?" என்று கேட்டார்.
ரகு
'இல்லவே இல்லை" என்று சொன்னான். உடனே அவனது மாமா, அருகில் நின்ற அருணை
அழைத்து நீங்கள் இன்று ஏதாவது தவறு செய்தீர்களா? என்றார். அருண் உண்மையை
ஒத்துக்கொண்டான். 'ஆமாம் நாங்கள் மாமரத்தில் கல்லெறிந்து திருடி தின்றோம்".
அப்போது யார் மீதோ கல் பட்டுவிட்டது. உடனே ஓடிவந்துவிட்டோம் என்றான்.
நீங்கள்
கல் எரிந்தது என் மீதுதான் என்றார் மாமா. இருவரும், மாமாவிடம் மன்னிப்புக்
கேட்டனர். நான் கேட்டதும் உண்மையைச் சொன்ன அருணுக்கு தான், நான் வாங்கிவந்த பரிசு
என்று சொல்லி விலையுயர்ந்த கைகடிகாரத்தை அருண் கையில் கட்டினார் மாமா. ரகு
'இனிமேல் பொய் சொல்ல மாட்டேன்" என்று மாமாவிடம் கூறினான். அவனுக்கு
கிரிக்கெட் பந்து வாங்கிக் கொடுத்து, ஆறுதல் படுத்தினார்.
நீதி
:
நாம்
பேசும் உண்மை நம் மதிப்பை தானாக உயர்த்தும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக