
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பள்ளி
மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப்
பக்கமாக வந்துகொண்டிருந்தார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் வருவதை பார்த்த மாணவன்
சதீஷ், 'டேய்... அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு" என்று கிண்டல் அடித்துக்கொண்டு
காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டி சிரித்தான். அதை பார்த்து மற்ற மாணவர்களும்
சிரித்தனர். ஆசிரியர் அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். இதுபோல அடிக்கடி கேலி செய்துகொண்டிருந்தான்.
வீட்டிற்கு
சதீஷ் ஒரே பையன் என்பதால் அவனுக்கு அதிக செல்லம். பெற்றோர்கள் அவனை கண்டிப்பதில்லை.
சதீஷ் சுட்டித்தனமாக இருந்தாலும், படிப்பில் கெட்டிக்காரன். பள்ளிப் படிப்பை முடித்து
கல்லூரிக்கு சென்ற பின்னும் அவனது குறும்புதனமான கலாட்டா அப்படியேதான் இருந்தது.
ஒரு
நாள் கல்லூரிக்கு சென்று திரும்பிய சதீஷ், அசதியில் நன்றாக தூங்கிவிட்டான். மறுநாள்
அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. அதனால் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு
சிகிச்சை அளித்ததில் அவனுக்கு பக்கவாதம் தாக்கியிருப்பதாக மருத்துவர் கூறினார். இறுதியில்
ஒரு கால் நடக்க முடியாமல் போனது. அதனால் கல்லூரிக்கு செல்ல பிடிக்காமல் சதீஷ் வீட்டிலேயே
முடங்கிவிட்டான்.
அப்போதுதான்
அவன் நினைத்துப் பார்த்தான் 'ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்கான
தண்டனைதான்" என்று நினைத்துக் கொண்டான். சதீஷ் நிலையை கேள்விப்பட்ட ஆசிரியர் தெய்வசிகாமணி,
சதீஷைப் பார்க்க வீட்டிற்கு வந்தார். படுக்கையில் கிடந்த சதீஷைப் பார்த்து சதீஷ், எப்படி
துறுதுறுன்னு விளையாடிக்கிட்டு இருப்ப. இப்ப இப்படி இருக்கறத பார்த்த கஷ்டமா இருக்கு.
பள்ளியில் படிக்கும்போது நீ தான் என்னைக் கேலி செய்வாய் என்று தெரியும். ஆனால், அது
அறியாப் பருவம். எனக்கு உன்மேல் எந்த கோபமும் இல்லை என்றார்.
'உடல்
ஊனம் ஒரு குறையே அல்ல. மனம் ஊனம் அடைந்தால் தான் ஆபத்து". எனக்கும் உன்னை போலதான்
திடீரென்று இப்படியானது. ஆனால், இப்போது நான் உன் முன்னால் ஆசிரியராக நிற்கிறேன். உன்னாலும்
முடியும். முதலில் நீ வெட்கப்படுவதை விட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்று படிப்பை தொடர
வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
நாம்
ஆசிரியரை எவ்வளவோ கிண்டல் செய்திருக்கிறோம். ஆனால், அவர் நம்மை ஊக்கப்படுத்திவிட்டு
செல்கிறாரே என்று நினைத்து, அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டான். பின்பு, அவர் சொன்னபடி
கல்லூரிக்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்தான். பிறகு ஆசிரியப் படிப்பையும் முடித்தான்.
ஆனால்,
அவனுக்கு உடனே வேலை கிடைக்காததால் சிறிது காலம் ட்யூன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு
இருந்தான். ஆசிரியர் தெய்வசிகாமணிக்கு பதவிகாலம் முடிந்தது. அவரது வேலையை சதீஷ்க்கு
கொடுக்குமாறு அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து அவ்வேலையை வாங்கிக் கொடுத்தார்.
அதன்பிறகு
சதீஷ் அதே பள்ளியில் ஆசிரியராக வேலையில் சேர்ந்தான். பின்பு, அவன் யாரையும் விளையாட்டிற்கு
கூட கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டான். ஆசிரியரை கேலி செய்ததும், அவரையே தன் குருவாக
நினைத்தையும் அவன் அடிக்கடி நினைத்துக்கொண்டான்.
நீதி :
தன்வினை
தன்னைச் சுடும். அதனால், தன்னைப் போலவே பிறரையும் நேசிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக