Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 2 நவம்பர், 2019

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோவில்

 Image result for அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூரில்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நடனபுரீஸ்வரர் கோவில் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலம் ஆகும்.

சுவாமி : நடனபுரீஸ்வரர்.

அம்பாள் : சிவகாம சுந்தரி.

மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், துர்க்கை.

தீர்த்தம் : அகஸ்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

தலவிருட்சம் : வன்னி மரம்.

தல வரலாறு :

 கயிலாயத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்ற போது திருக்கல்யாணத்தை காண தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வந்தனர். இதனால் வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. பூமி தேவியின் பாரத்தை சமம் செய்வதற்காக சிவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார்.

 சிவன், பார்வதி திருக்கல்யாணத்தை காண முடியாமல் மனம் வருந்திய அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தருவதாக அருள்பாலித்தார். அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள நடனபுரீஸ்வரர் திருக்கோவிலில் அகத்திய முனிவரின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் கார்த்தியாயனி சமேத கல்யாணசுந்தரராய் அகத்தியருக்கு காட்சித்தந்து அருளினார்.

 அகத்தியருக்குக் காட்சி கொடுத்த இறைவன் அவருக்கு இரண்டு வரங்களையும் கொடுத்தார். அதன்படி இத்தலத்திற்கு வந்த நடனபுரீஸ்வரரை வழிபட்டால் திருமணம் தடைபடுகிறவர்களுக்கு திருமணத் தடைகள் விலகும் என்றும், தங்கள் வாழ்விலுள்ள சகல தடைகளும் தீங்கி கயிலாயத்தை தரிசித்தால் ஏற்படும் பலன் கிட்டும் என்றும் அருள் புரிந்தார். ஆகையில் இத்தலம் திருமணத் தடை நீக்கும் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

தலச் சிறப்பு :

 நடனபுரீஸ்வரர் திருக்கோவில் தெற்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்து உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே முன் மண்டபம் உள்ளது.

நடனபுரீஸ்வரர் உயர்ந்த திருமேனி எழிலுடன் லிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

பிராகாரத்தில் வலம் வரும் போது கோஷ்டத்தில் 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

வேண்டுதல்கள் :

திருமணத்தடை நீங்கவும், புத்திரபேறு கிட்டவும், நாக தோஷம் நீங்கவும், தீராத நோய்கள் நீங்கவும் மக்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். இங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் செலுத்தி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!