இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆப்பிரிக்கா
கண்டத்தில் உள்ள நைஜீரியா நாட்டின் அருகில் உள்ளது பெனின் என்ற சிறிய நாடு.
அந்நாட்டின் கோட்டொனொ பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு கடந்த சனிக்கிழமை நார்வே
நாட்டைச் சேர்ந்த எம்.வி.பொனிட்டா கப்பல் சென்றது. அக்கப்பலில் இருந்த 9 கப்பல்
ஊழியர்கள் திடீரென மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து
நார்வேயை சேர்ந்த அந்த கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். ஜிப்சம் இறக்குமதி செய்வதற்காக பொனிட்டா
கப்பல் கோட்டொனொ துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
திடீரென அங்கு நுழைந்த கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்த ஊழியர்களை கடத்திச்
சென்றனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவர்களை பற்றிய
தகவல்கள் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படும்” என
தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்கள் யாரும் நார்வே குடிமகன்கள் அல்ல, அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என்று நார்வே கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தை மேற்கோள் காட்டி நார்வே ஊடகங்கள் நேற்று செய்திகள் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக