இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அத்தனூர்
என்ற கிராமத்தில் எழிலி என்ற குட்டிப் பெண்ணும், அவளுடைய அம்மாவும் வாழ்ந்து வந்தனர்.
எழிலி அந்த கிராமத்துப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். எழிலியின் அம்மா
விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து வந்தார். அதில் வரும் வருமானத்தில் தான் இருவரும்
அவர்கள் தேவைகளை நிறைவு செய்து கொண்டனர்.
வருமானம்
பற்றாக்குறையாக இருந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருவரும் மகிழ்ச்சியாக
வாழ்ந்து வந்தனர். தாயும், மகளும் ஒருவர்மீது ஒருவர் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர்.
ஒரு முறை எழிலியின் அம்மா ஒரு வெள்ளி மோதிரத்தை பெட்டியில் வைத்திருந்தார். அது மிகவும்
பழையதாகவும், கறுப்பாகவும் இருந்தது.
எழிலி
விடுமுறை நாளன்று பெட்டியை சுத்தம் செய்த போது, அந்த மோதிரம் எழிலியின் கண்களில் பட்டதும்
அதை எடுத்துத் தன் விரலில் போட்டுக் கொண்டாள். அவளுக்கு அந்த மோதிரம் சற்று பெரியதாக
இருந்தது. இருந்தாலும் கழற்ற மனமின்றி நூல் சுற்றிப் போட்டுக் கொண்டாள்.
ஒரு
நாள் எழிலி தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது விரலில் போட்ட மோதிரம் கறுப்பாகத்
தெரிகிறது என்று கிண்டல் செய்தார்கள். அதனால், உடனே எழிலி வீட்டிற்கு வந்து மோதிரத்தை
சோப்பும், தண்ணீரும் போட்டு தேய்த்து கழுவினால். அப்போது அந்த மோதிரத்தில் இருந்து
ஒரு தேவதை தோன்றியது!
தேவதையைப்
பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சமாளித்துக் கொண்ட எழிலி... நீங்கள் யார்?
உங்களுக்கு என்ன வேண்டும்? என்று பணிவுடனும், அன்புடனும் கேட்டாள். நான் இந்த மோதிரத்தின்
தேவதை. இந்த மோதிரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
கேட்டதை
எல்லாம் கொடுக்கும். உனக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேள் பெண்ணே! வீடு வேண்டுமா? நிலம்,
நகைகள், பணம் எது வேண்டும்?... சீக்கிரமாகக் கேள். மோதிரத்தில் இருந்து வெளிவந்தால்
யாருக்கேனும் எதையாவது கொடுத்தால்தான் என்னால் தேவதையாக இருக்க முடியும். இல்லாவிட்டால்
எனக்கு ராட்சஸ வடிவம் கிடைத்துவிடும் என்று எனக்கு ஒரு சாபம் இருக்கிறது என்றது தேவதை.
உடனே
எழிலி அந்த தேவதையிடம், தேவதையே உன் சாபம் பலித்துவிடும் என்று நீ அஞ்சுகிறாய். ஆனால்
யாரிடமும், எதையும் இலவசமாக பெறக்கூடாது. உழைத்து வாழ்வதே சிறந்தது என என் தாய் சொல்லி
இருக்கிறார். உன்னிடம் இருந்து நான் எதைப் பெற்றாலும் என் தாயின் சினத்திற்கு நான்
ஆளாவேன். எனவே எனக்கு எதுவும் வேண்டாம். நீ போகலாம் என்று சொல்லிவிட்டாள்.
ஆனால்,
தேவதை தன் சாபத்தை சொல்லி, விடாமல் கெஞ்சிக் கொண்டே இருந்தது. அதனால், எழிலி சற்று
மனமிரங்கி... சரி தேவதையே, எங்களுக்குப் பொன்னோ, பொருளோ தேவையில்லை. எப்போதும் உழைத்து
வாழ வேண்டும் என்ற உறுதியையும், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தையும்
மறந்து போகாமல் இருக்கும்படியான வரம் தர முடியுமா? என்று கேட்டாள்.
தேவதையும்
மகிழ்ந்து அப்படியே தருகிறேன். அதனுடன் இத்தனை வறுமையிலும் எதற்கும் ஆசைப்படாத உனக்கும்,
உன் தாய்க்கும் நோயற்ற வாழ்வோடு நீண்ட ஆயுளையும் தருகிறேன் என்று சொல்லி மோதிரத்திற்குள்
மறைந்தது.
அன்று
மாலை எழிலியின் தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் எழிலி
கூறினாள். மகள் கூறியதை கேட்டதும் மகளைக் கட்டியணைத்து, முத்தமிட்டுப் பாராட்டினார்.
பின்பு, இந்த மோதிரம் நம்மிடம் இருந்தால், ஏதேனும் ஒரு சமயத்தில் இதை உபயோகப்படுத்தி
பலன் பெறலாம் என்ற எண்ணம் நமக்குத் தோன்றக்கூடும்.
உழைக்காமல்
பெறும் எந்த உதவியும் நமக்குப் பலன் தராது. அடுத்து வரும் தலைமுறையினருக்கும் உழைப்பின்
உயர்வு புரிய வேண்டும். எனவே இந்த மோதிரத்தை நாம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறி
அதைப் பாழடைந்த கிணறு ஒன்றில் எழிலியின் அம்மா வீசி விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக