இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று
நமக்கு உணர்த்துகின்றன. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து
அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன.
1. மச்சாவதாரம்: சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று,
கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி,
கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம்
தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை
கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது
சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை
உணர்த்தினார்.
2. கூர்மாவதாரம்: திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும்
கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை
(கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட
பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார்.
3. வராக அவதாரம்: இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில்
இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமியை
தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான்
சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான்
அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும். இது கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ளது.
4. நரசிம்ம அவதாரம்: தன் பக்தனான பிரகலாதனை
இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள்
வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும்
மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார்.
5. வாமன அவதாரம்: மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க
அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார்.
6. பரசுராம அவதாரம்: ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய்
பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன்
தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம
அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார்
திருமால்.
7. ராமாவதாரம்: ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும்,
பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும்,
சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த
அவதாரம் ராமாவதாரம்.
8. பலராம அவதாரம்: திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும்
முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக்
கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு.
9. கிருஷ்ண அவதாரம்: கண்ணன் தனது சிவயோக மகிமையால்
சிவபெருமானாகவே இருந்து, குரு ஷேத்திர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை
செய்ததாக பாகவதம் கூறுகிறது.
10: கல்கி அவதாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக