Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 நவம்பர், 2019

அதிசய கை அல்ஹாசரும் திருஞான‌சம்பந்தரும் – ESP 8

 Image result for miracle hands


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 


இறுதியாக இந்த ESP பகுதியில் “பொதுமனம்” என்றால் என்ன என்பதை பார்த்திருந்தோம். அடுத்து ESP சக்தியை வெளிப்படுத்திய நவீன கால மனிதர்கள் பற்றியும், அவர்களுடன் தொடர்புடைய புராண, மத ரீதியான சம்பவங்களையும் பார்க்கலாம். (எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை. வெறும் அறிவியல் ரீதியான பார்வை மட்டுமே.)
ESP இல் இருக்கும் சில பிரிவுகள் பற்றி முதலாம் பதிவில் பார்த்திருந்தோம். இப்போது அப் பகுதிகளில் “பெளதீக விதிகளை மீறும் சக்திகள்” எனும் பிரிவில் உள்ள சில மனிதர்களை பற்றி பார்க்கலாம். (ஏற்கனவே அனுமாருடன் ஒப்பிடுகையில் பார்த்த மனிதர்கள் இப்பிரிவிலேயே அடங்குவார்கள்.)
அதிசய கரங்கள்!
இஸ்ரேலின் தலை நகரில் 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்தவர் ஜோசப் அல்ஹாசர் (joseph alhaser) தலை நகரில் மருத்துவராக பணி புரிந்த இவரின் வீட்டில் மாலை நேரங்களில் இவரைக்காணுவதற்கென ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் வரிசையில் காத்திருப்பார்கள். காரணம் அவரது கைகள்!
மருத்துவ மனையில் பணி முடிந்ததும், தனது வீட்டில் நோயாளிகளை பார்வையிடுவது இவரது வழக்கம். இவருது வீட்டு பிரத்தியேக மருந்தக அறையில் மருத்துவத்திற்குரிய எந்த பொருட்களும் இருக்காது. ஒருவர் படுக்க கூடிய அளவில் ஒரு கட்டில் மட்டுமே இருக்கும்! வரும் நோயாளிகள் அனைவரையும் தனது கைகளால் மெதுவாக வருடுவதன் மூலம் குணப்படுத்தும் அதிசய ESP தன்மை கொண்டவர் இவர்.
உதாரணத்திற்கு பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் இருந்து ஒன்று,
ஜெருசலேமில் வசித்துவந்த இயாஸ் என்ற பெண்ணிற்கு முதுகுப்புறம் தொடங்கி கால்,கைகள் உட்பட உடலின் அனைத்து பாகங்களிலும் திடீர் திடீரென ஊசி குற்றுவது போல் தீராத வலி ஏற்பட்டு பல நாட்களுக்கு நீடிக்கும். இதனால் தற்கொலைக்கு கூட அந்த பெண் முயற்சித்துள்ளாள்.

இந்த நேரத்தில், அல்ஹாசர் பற்றிய தகவல் அறிந்து அவரிடம் சிகிச்சை பெற வந்திருந்தாள் அந்தப்பெண். பெண்ணின் நோயை கேட்டு அறிந்துகொண்ட அல்ஹாசர் ஒரு கணம் கண்ணை மூடி தியானித்த பின்னர்; தனது கைகள் இரண்டையும் உரசிவிட்டு அந்த பெண்ணின் முதுகுப்புறத்தை இலேசாக தடவினார். சற்று நேரத்தில் அந்த பெண்ணிடம் நிலைகொண்டிருந்த வலிகள் அனைத்தும் காணாமல் போயின!

அல்ஹாசரின் கைகள் பட்ட போது தனது உடலில் சிறிய மின்சாரம் பாய்ச்சப்பட்டது போன்று தான் உணர்ந்ததாக அந்தப்பெண் கூறியுள்ளார்.
அல்ஹாசரின் புகழ் பரவவே சில விஞ்ஞானிகள் அல்ஹாசரை சோதனைக்கு உட்படுத்த முடிவெடுத்தார்கள். அல்ஹாசர் கண்களை மூடி கைகளை உரசி உடலை தொடும் போது, உண்மையிலேயே அல்ஹாசரின் கைகளில் சிறிய மின்னோட்டம் உருவாவதை ஆராச்சிகருவிகள் காட்டின. அவரிடம் உருவான அந்த மின் திறன் 3728.5 Watts மின் சாதனத்தை இயக்கவல்லதாக இருந்தது!
ஒரு சாதாரண மனிதனிடம் இவ்வாறான மின் சக்தி உருவாக வாய்ப்பேயில்லை. மேலும் இன்னோர் ஆச்சரியமாக, திடகாத்திரமான மனிதர்கள் மீது அவரின் மின்னோட்டம் பாயவில்லை! அது ஏன் என்பது இன்றுவரை இடைவெளியுள்ள கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
அல்ஹாசர் தனது சக்தி பற்றி குறிப்பிடுகையில், தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முதல் என் மனதை ஒரு நிலைப்படுத்துகின்றேன். அப்போது எனது கைகளில் மின்னோட்டம் ஓடுவதை உணர்கின்றேன். என்றார். மேலும், சாதாரண நேரங்களில் அவ் மின்னோட்டம் இருப்பதில்லை எனவும், இந்த சக்தி தனக்கு சிறுவயது முதல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 
அதேவேளை, தான் யாரிடமும் கட்டணம் கேக்காமல் இருப்பதும், வாரத்தில் இரு நாட்கள் தாங்களாக முன்வந்து நோயாளிகள் கொடுக்கும் கட்டணத்தை கூட வாங்காமல் இலவசமாக சிகிச்சை கொடுப்பதால் இந்த திறன் தனக்கு அதிகரிப்பதாக உணர்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பிற்காலத்தில் அவரிடம் அந்த சக்தி இல்லாமல் போனதாக அறியமுடிகிறது.
இந்து புராண கதைகளில், 64 நாயன்மார்களின் அற்புதங்கள் என்று ஒரு பகுதி இருக்கிறது. அந்த பகுதியில் இடம் பெறும் சம்பவங்கள் பெரும்பாலும் மேலே குறிப்பிட்ட அல்ஹாசரின் சம்பவங்களுடன் ஒத்துப்போகும். இந்த நாயன்மார்கள் சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத பல அற்புத செயல்களை செய்திருப்பதாக கதைகளில் குறிப்பிடப்படுகிறது.

நோய்களை போக்குவது, சுண்ணாம்பு அறையை குளிர்மைப்படுத்துவது, நிறைகளை இல்லாமல் செய்வது என பல அற்புதங்கள் கூறப்படுகின்றன. அவை அனைத்துமே இந்த ESP என்ற அறிவியல் பகுதிக்குள் வைத்து பார்க்க கூடியவைகளே. நான் அறிந்த வரையில், நாயன் மார்கள் தமது விசேஷ  சக்திகளை தவம் இருந்து பெற்றதாக பெரும்பாலும் எங்கும் குறிப்புக்கள் இல்லை. (அதேநேரம் அனைவரும் கடவுள் பக்தியுள்ளவர்களாக இருந்ததாக குறிப்புக்கள் உண்டு. (அல்ஹாசர் தனது மனதை ஒரு நிலைப்படுத்த கண்மூடி தியானம் செய்ததும் நாயன் மார்களின் சம்பவங்களில் வரும் கடவுள் வழிபாடும் ஒன்றாகவும் இருக்கலாம்.)
சற்று விரிவாக ஒரு உதாரணத்தை பார்த்தால்,
 
பாண்டிய மன்னன் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது திருநீறு மற்றும் கைகளால் அதை திருஞானசம்பந்தர் நீக்கியதாக குறிப்பிடப்படுகிறது. அல்ஹாசர் செய்த சிகிச்சைக்கும் இச் சம்பவத்திற்கும் பெரும் வித்தியாசங்கள் இல்லை. (திருநீறு என குறிப்பிடப்பட்டது மூலிகையாகவும் இருக்கலாம். அல்லது, அந்த கால கட்டத்தில் நடைபெற்ற சமண, சைவ மோதல்களில் சைவத்தை மேம்படுத்திக்காட்ட பயண்பட்ட யுக்தியாகவும் இருக்கலாம்.)
ஒரு சம்பவத்தை விரிவாக பார்க்கும் போதே பதிவு நீண்டு விட்டது, அடுத்த பதிவில் சுருக்கமாக அல்ஹாசரை மிஞ்சும் அளவிற்கு சக்தி வாய்ந்த சில மனிதர்கள் பற்றியும், இயேசு  நாதரின் இறைத்தன்மை பற்றியும் ஒப்பீட்டு பார்வையில் பார்க்கலாம்.
இங்கு நான் குறிப்பிட்டவை பலருக்கு பிடிக்காத விசயங்களாக இருக்கலாம். பிடித்திருக்கலாம். உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள். நாகரீகமான கருத்துக்களுக்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். :)
உங்கள் மனதில் தோன்றும் ESP தொடர்பான கருத்துக்களையும் தெரிவியுங்கள். :)
நன்றி, மீண்டும் சந்திப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக