Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 டிசம்பர், 2019

ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய் மட்டுமே! அலைமோதிய மக்கள் கூட்டம்!


ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய் மட்டுமே! அலைமோதிய மக்கள் கூட்டம்!
டும் விலையேற்றத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்து வருகிறது. கடலூரில் வெங்காயத்தின் விலை கிலோ 10 என விற்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. 

வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனையாகி பரபரப்பை உண்டாகியுள்ளது. கடலூர் மார்க்கெட்டில் குறிப்பிட்ட சில கடைகளில் கார்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இங்கு நேற்று கிலோ 50 க்கு விற்பனை ஆகியுள்ளது.

அதன் பிறகு 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து கூட்ட நெரிசல் அதிகமானதால் ஒரு நபருக்கு 50 ரூபாய்க்கு 2 1/2 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்பட்டது. 

பின்னர் மேலும் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து போட்டிக்கென்று ஒரு கிலோ 20 மற்றும் ஒரு கிலோ 10 என ஒரு நபருக்கு 1 கிலோ வெங்காயம் மட்டுமே என அறிவிக்கப்பட்டதால் மேலும் கூட்டம் கூடியது. இதனை மக்கள் கூட்டத்தை போலீஸ்காரர்கள் தற்போது ஒழுங்குபடுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக