ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 40 பேருடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
மகோய்டூய்- ஸ்ரெடென்சிக்- ஒலோச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பேருந்து பயணித்த போது, பேருந்தின் முன்பக்க ரயர் திடீரென வெடித்தது.
இதனால் நிலைகுலைந்த பேருந்து பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக