தொலைத்தொடர்பு இணைப்புகளை ஏற்படுத்தும் கட்டணத்தை டிசம்பர் 2020
வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2021 க்கு பிறகே ஐயூசி கட்டணம் முழுமையாக
நீக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஏர்டெல்,
வோடபோன், ஜியோ கோரிக்கை
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா
நிறுவனங்கள் ஐயூசி கட்டணத்தை நீக்குவதற்து தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை
தெரிவித்து வந்தது. இந்த நிலையில் ஜியோ ஐயூசி கட்டணத்தை நீக்க வேண்டும் என
கோரிக்கை முன் வைத்தது.
பிற நிறுவனத்துக்கு 6 பைசா கட்டணம்
செல்போன்களில் ஒரு தொலைத்தொடர்பு
நிறுவன இணைப்பில் இருந்து வேறு நிறுவன இணைப்புக்கு பேச ஒரு நிமிடத்துக்கு 6 பைசா,
கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை அழைப்பு மேற்கொண்ட நிறுவனம், அழைப்பை
பெற்ற நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது. இந்த கட்டணம், வருகிற ஜனவரி 1-ந்தேதியுடன்
ரத்துசெய்யப்படுவதாக இருந்தது.
2021 வரை நீட்டிப்பு
இதுதொடர்பாக டிராய் அறிக்கையில்,
ஐ.யூ.சி என்பது ஒரு தொலைதொடர்பு சேவை வழங்குநரால் ஒரு நெட்வொர்கில் இருந்து
மற்றொரு ஆபரேட்டர் நெட்வொர்க்கிற்கு அழைக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படும். இந்த
கட்டணத்தை 2020 டிசம்பர் 31 வரை நிமிடத்திற்கு 6 பைசாவாக இருக்கும் என்று தனது
அறிக்கையில் அறிவித்துள்ளது.
ஜியோ தொடர்ந்து வசூலிக்கும்
இதையடுத்து தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ
வாடிக்கையாளர்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க உள்ளது. மேலும் பிற
தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன், ஏர்டெல் தங்களது அழைப்புகளை தொடர்ந்து
இலவசமாக வழங்கி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக