Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 டிசம்பர், 2019

பட்டன் போனில் உங்களால் இதை செய்ய முடியுமா..? அப்ப அந்த ரூ. 35 லட்சம் உங்களுக்கு தான்..!


வளர்ச்சிக்கு தேவை  

லக அளவில் இணையம் பல்வேறு துறைகளையும் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. சாதாரணமாக லைட், பேன் சுவிட்ச் போடுவது தொடங்கி திருணம் செய்து கொள்வது, குழந்தை பெற்றுக் கொள்ளும் மருத்துவ சேவைகள் வரை இணையம் இல்லாமல் எதுவும் இல்லை.
இந்த மாற்றங்கள் வரிசையில், யூ பி ஐ பேமெண்ட்கள் அசுரத் தனமாக வளர்ச்சி கண்டு கொண்டு இருக்கின்றன. கடந்த நவம்பர் 2019-ல் மட்டும் சுமாராக 120 கோடி பணப் பரிமாற்றங்கள் நடந்து இருக்கிறதாம்.
அதே போல, யூபிஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் 10 கோடியைத் தொட்டு இருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் இது ஐந்து மடங்கு வரை அதிகரிக்கலாம் எனவும் சொல்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.
வளர்ச்சிக்கு தேவை
இப்படி யூபிஐ சேவை இந்தியா முழுக்க பரவ வேண்டும் என்றால், ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் இந்த சேவை இருக்க வேண்டும் இல்லையா..? எனவே தான் என் பி சி ஐ (NPCI - National Payments Corporation of India), CIIE.CO and Bill and Melinda Gates Foundation உடன் இணைந்து ஒரு போட்டியை அறிவித்து இருக்கிறது.
போட்டி
இந்தியாவில், ஃப்யூச்சர் போன் என்று சொல்லப்படும் பட்டன் போனைப் பயன்படுத்துபவர்களும், யூபிஐ சேவையை பயன்படுத்தும் வகையில், ஏதாவது ஒரு நல்ல சொல்யூஷனை வடிவமைத்துக் கொடுக்க வேண்டும். தற்போது ஸ்மார்ட்ஃபோனில் யூபிஐ-யைப் பயன்படுத்தி பணத்தை பரிமாற்றம் செய்வது போல, பட்டன் போனிலும் செய்ய முடிய வேண்டும்.
யார் எல்லாம் வரலாம்
இந்த போட்டியில் தனி நபர்கள், நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். முதல் மூன்று இடங்களுக்கு பரிசு கொடுப்பார்களாம். முதல் இடம் பிடிப்பவர்களுக்கு 50,000 டாலர் (35 லட்சம் ரூபாய்) பரிசு. இரண்டாம் இடத்துக்கு 30,000 டாலர் (21 லட்சம் ரூபாய்), மூன்றாம் இடத்துக்கு 20,000 டாலர் (14 லட்சம் ரூபாய்) பரிசாம்.
கடைசி தேதி
என் பி சி ஐ, CIIE.CO and Bill and Melinda Gates Foundation இணைந்து நடத்தும் இந்த போட்டியில் பங்கு பெற முறையாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமாம். இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 12, 2020 என நந்தன் நிலக்கனியே தன் டிவிட்டரில் சொல்லி இருக்கிறார்.
போட்டிக்கு விண்ணப்பிக்க - https://grand-challenge.ciie.co/
தேர்வு முறை
விண்ணப்பித்த பின், போட்டிக்கு தேர்வாகும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களூக்கு என் பி சி ஐ-யின் ஏபிஐ வழங்கப்படும். இந்த ஏபிஐ-களைப் பார்த்து, என்ன மாதிரியான டெக்னிக்கல் வசதிகள் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொண்டு பட்டன் போனுக்கான சொல்யூஷன்களை தயார் செய்ய வேண்டும். தேர்வாகும் போட்டியாளர்கள் பிப்ரவரி 11, 2020-ல் மும்பைக்கு அழைக்கப்படுவார்கள்.
ஃபண்டிங்
பரிசு பெறும் போட்டியாளர்கள் தங்கள் ஸ்டார்ட் அப் திட்டத்தை CIIE.CO அமைப்பிடம் விளக்கலாம். இந்த CIIE.CO அமைப்புக்கு திட்டம் பிடித்து இருந்தால் மற்ற முதலீட்டாளர்களிடம் பேசச் சொல்லி வழிகாட்டுவார்கள். உங்கள் ஸ்டார்ட் அப் திட்டத்துக்கான நிதி கூட எளிதில் கிடைக்கலாம்.
வாழ்த்துக்கள்
டியர் டெக்கி நண்பர்களே... இது உங்கள் ஸ்டார்ட் அப் கனவுகளுக்கான ஒரு அரிய வாய்ப்பு. பட்டன் போன் வைத்திருக்கும் ஏழை எளிய இந்தியர்கள், யூபிஐ பயன்படுத்த வழி வகை செய்யுங்கள். உங்கள் ஸ்டார்ட் அப் திட்டத்துக்கு முதலீடுகளையும் பெறுங்கள். வெற்றி பெற எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக