Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 டிசம்பர், 2019

திருடுவதில் புதுபாணி; சேலத்தை உலுக்கிய பலே திருடன் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை சேலம் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை அடுத்த சூரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையிலான நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார்.

இதனால் அவரை அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இந்த சூழலில் அவர் ஓமலூரை சேர்ந்த அய்யந்துரை என்று தெரியவந்தது. இவர் கோவை மத்திய சிறையில் இருந்து 40 நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார்.

இதையடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு கொள்ளை என 40 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் இருந்து ரூ.70,000 ரொக்கம், 10 சவரன் நகை, 6 இருசக்கர வாகனங்கள், ஒரு முருகன் சிலை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த திருடன் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தினமும் ஒரே இடத்தில் தங்குவதில்லை. பகல் முழுவதும் பேருந்திலேயே பயணித்து அதிலேயே உறங்கி வந்துள்ளார்.

இரவு நேரத்தில் ஏதேனுமொரு வீட்டை தேர்வு செய்து அங்கு கொள்ளை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக திருட்டு தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது.

ஒருநாள் திருடாவிட்டாலும் சரியாக தூக்கம் வராது என்று போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக