கரூரிலிருந்து ஏறத்தாழ 21கி.மீ தொலைவிலும், மாயனூரிலிருந்து 2கி.மீ தொலைவிலும், இயற்கை எழிலோடு அமைந்துள்ள இடம் தான் மாயனூர் பூங்கா.
சிறப்புகள் :
மாயனூர் பூங்கா காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்கு ஊஞ்சல்கள், சறுக்கு மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இருக்கும் கண்ணாடி மாளிகை, இயற்கையோடு இணைந்த புல் தரைகள், பூங்காவை அழகுப்படுத்தும் செடிகள் ஆகியவை காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளன.
இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் மாயனூர் கதவணை உள்ளது. மாயனூர் கதவணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆற்றில் கடல்போல் காட்சியளிக்கும். இதனை ரசித்து கண்டுக்களிக்கலாம். இங்கு நம்முடைய கண்களுக்கு அழகாக தோற்றமளிக்கும் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் உள்ளது.
மாயனூரில் இருக்கும் செல்லாண்டி அம்மனை வழிபட வரும் பக்தர்கள் இந்த பூங்காவிற்கு வருகை தருவதோடு மட்டுமில்லாமல் அங்குள்ள இயற்கை அழகுகளையும் ஆர்வத்துடன் கண்டுகளிக்கிறார்கள்.
கரூர் கிராம மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக மாயனூர் பூங்கா திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இந்த பூங்காவிற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
எப்படி செல்வது?
கரூரில் இருந்து பேருந்துகள் மூலம் செல்லலாம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கரூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக