இணையதள பயன்பாடு என்பது அத்தியாவசியா ஒன்றாக
இந்த காலக்கட்டம் மாறியுள்ளது. பொதுவாக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை நாம்
இணையதளத்திற்கு என்றே செலவிட்டு வருகிறோம். அதில் சமூகவலைதளப்பக்கத்தில்
பெரும்பாலான நேரம் செலவிடுகிறோம் என்றாலும் பொதுவாக நாம் சிலவற்றை தேர்ந்தெடுத்து
தேடுவோம்.
இணையத்தளத்தில்
அதிகம் தேடுபவை எவை
இந்தியப் பெண்கள் பொதுவாக
இணையத்தளத்தில் அதிகம் தேடுபவை எவை என்று புதிய சர்வே குறித்து தனியார் நாளிதழ் ஒன்றில்
வெளியிடப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் பொதுவான நேரத்தை செலவிட்டாலும் தனித்து
தேடுதளத்தில் அதிகம் தேடுபவை குறித்து சர்வே இதில் காணப்பட்டுள்ளது
ஆற்றலை
வளர்த்துக் கொள்ளவே விருப்பம்
இதில் மெட்ரோ நகரங்களில் வசிக்கக்
கூடிய பெண்களில் 44 சதவீத பேர் ஆங்கிலப் புலமை மற்றும் மென் கலை குறித்த ஆற்றலை
வளர்த்துக் கொள்ளவே இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதேபோல் இணையத்தில் அதிகம்
பயன்படுத்தும் நேரம் என்று பார்த்தால் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை
செலவிடுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆங்கிலத்திலே
விருப்பம்
இந்தியா முழுவதும் பல்வேறு தாய்
மொழிகள் இருந்தாலும், அனைவரும் தேடும் பொது மொழியாக ஆங்கிலமே இருந்து வருகிறது.
அனைவரும் தங்களது தேடல்களை தாய் மொழிகளில் கற்று தெரிந்து கொள்வதைவிட ஆங்கில
மொழியில் கற்று தெரிந்து கொள்ளவே விருப்பம் தெரிவிக்கின்றனர்.
வயதுவாரியாக
அதிகம் தேடுபவை
இந்திய பெண்களில் வயது வாரியாக
பார்த்தால், 18 முதல் 23 வயதுடைய பெண்கள் இணையத்தில் பெரும்பாலம் கல்வி, வேலை
வாய்ப்பு, திறன் வளர்ப்பு உள்ளிட்டவைகளை தேடிகின்றனர். 29 முதல் 35 வயதுக்குட்பட்ட
பெண்களை பொருத்தவரையில் ஆரோக்கியம் மற்றும் சுய முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளை
அடிப்படையாக கொண்டவைகளாக இருக்கிறது.
படிப்பதை
விட பார்ப்பதில்தான் விருப்பம்
மேலும் மடிக்கணினியை விட 60% பேர்
ஸ்மார்ட் போன்களில்தான் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, இணையத்தில்
படிப்பதை விட வீடியோ பார்த்து தெரிந்து கொள்வதையே பெண்கள் அதிகம்
விரும்புகின்றனர். இதில் 35-க்கு மேற்பட்ட பெண்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி
தொடர்பான வீடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக