இலங்கையின் சுதந்திர தின விழாவில் இனி சிங்கள
மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று இலங்கை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திர தின விழாவில் இனி
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது எனவும், பழமொழிகள் கொண்ட இந்தியாவில்
ஒருமொழியில் மட்டும் தேசிய கீதம் இசைப்பது போல் இனி இலங்கையிலும் ஒரு மொழியில்
மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை அமைச்சர் ஜனக
பண்டார தென்னகோன் கூறுகையில், இலங்கையின் சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசிய
கீதம் இசைக்கப்படாது, சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும். இந்தியாவில் பல
மொழிகள் இருக்கின்றன. என்றபோதிலும் ஒரே மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகிறது.
அதுபோல இலங்கையில் இனி ஒரு மொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 72-வது சுதந்திர தினம் 2020
பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டடப்பட இருக்கும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு
வெளியாகியுள்ளது. கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் நடைபெறும் இந்த விழா
குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்
கூறப்படுகிறது.
1948-ஆம் ஆண்டு இலங்கை
சுதந்திரமடைந்ததன் பின்னர் முதல் சுதந்திர தின நிகழ்வானது கொழும்பு சுதந்திர
சதுக்கத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் மீண்டும் தற்போது 72-வது சுதந்திரம் தினம்
அதே இடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது சுதந்திர
தினத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. எனினும்
பின்னர் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம்
இசைக்கப்பட்டு வந்தன.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனாதிபதியாக
மைத்திரிபால சிறிசேன ஆட்சியேற்றதன் பின்னர் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு
மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டடுவந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, கோட்டாபய ஜனாதிபதியாக
பொறுப்பேற்று இருக்கும் நிலையில், மீண்டும் தனிச் சிங்களத்தில் தேசிய கீதம்
இசைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இலங்கையில் இடம்பெறும்
பெயர் பலகைகள், இடையாள பதாகைகளில் தமிழ் மொழி அகற்றப்பட்டு சிங்கல மொழி
புகுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் தற்போது தமிழ்
மொழி தேசியகீதம் பொது நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக இலங்கை
தமிழர்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக