Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 டிசம்பர், 2019

மினு மினுக்கிகள் – மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் ?


லகில் ஏறக்குறைய 2000 வகையான மின் மினிப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சில வகை பூச்சிகள் மட்டுமே ஒளி சிமிட்டும் தன்மையினை பெற்று உள்ளன.
புழு பருவத்திலேயே அவைகளுக்கு ஒளி உமிழும் தன்மை இருப்பது அவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள உதவுகிறது. இந்த புழுக்கள் மண்புழுக்களை உணவாக்கிக் கொள்கின்றன.
ஒளிரும் தன்மையை பையோலுமினசென்ட் என்று சொல்லுகிறோம். பூச்சிகளின் அடி வயிற்றில் சுரக்கும் லுசிபெராஸ் என்ற என்சைம் கால்சியம் ,காற்று மற்றும் (ATP) வினை புரிந்து நரம்பு செல்களில் தூண்டப் பெற்று ஒளி சிமிட்டல்களை நிகழ்த்துகிறது. ஒளியானது வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை மேலும் வேதி மாற்றத்தின் 90 சதவீதம் வெளிச்சமாக்கப் படுகிறது. நாம் உபயோகப் படுத்தும் விளக்குகளில் கூட ஆற்றல் ஆனது பத்து அல்லது 20 சதம் தான்.
கடல் உயிரிகள் ஒளி உமிழ்பவையாக உள்ளன அது போலவே மின் மினி பூச்சிகளும்.
குளிர் காலங்களில் இவைகள் ஒளிர்வதை நிறுத்திக் கொள்கின்றன.
“லுசிபெராஸ் / Luciferase ” தடயவியல் துறை மற்றும் உணவு தரக் கட்டுப்பாட்டு சோதனைகளில் பயன் படுத்தப் படுகிறது.
பறவைகளில் சில இந்த பூச்சிகளை பிடித்து தம் கூட்டில் வைத்துக் கொள்கிறது. காட்டுவாசிகளும் இப்பூச்சிகளை பிடித்து வெளிச்சத்திற்கு பயன் படுத்தி இருக்கின்றனர். ஜப்பானில் கூட இவற்றை பிடித்து பறக்க விடும் விழா எல்லாம் இருந்திருக்கிறது…இப்போதுமா? என்பது தெரியவில்லை.
நீலம்,மஞ்சள், ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் ஒளியை மினுக்குகின்றன.
ஏன் சிமிட்டலை நிகழ்த்துகின்றன ? இரண்டு விசயங்கள் ஒளி சிமிட்டல் தன் இணையை கவர்வதற்காகவும், எதிரிகள் முன் சாப்பிட தான் ‘வொர்த்’ இல்லை என்பதை சுட்டிக் காட்டவும்.
ஒரு நிலப் பகுதியில் இருந்து அடுத்த நிலப் பகுதிகளுக்கு இவை செல்லாதது மற்றும் கால நிலை வெப்பச் சலன மாற்றங்கள், மனிதர்களின் நில பயன் பாடுகள், மனிதர்களால் உபயோகிக்கப் படும் நச்சு மருந்துகள், இவைகள் காணாமற் போவதற்கான காரணங்கள்.
மின் மினி பூச்சிகள் ஒளிர்வது ஒன்று போலவே நமக்கு தெரிந்தாலும் ஒன்றுக்கொன்று வெவ்வேறான அலைவரிசை கோடிங்கை கொண்டிருக்கின்றன என்பது ஆச்சர்யமான தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக