Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

பேஸ்புக்கிலிருந்து போட்டோஸ், வீடியோஸ்களை கூகுள் போட்டோஸிற்கு நேரடியாக மாற்றலாம்!


புதிய டேட்டா போர்ட்டபிலிட்டி சேவை

பேஸ்புக் நிறுவனம் தனது பயன்பாட்டில் ஷேர் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நேரடியாகக் கூகுள் போட்டோஸ் தளத்திற்கு மாற்றுவதற்கான விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் திங்களன்று வெளியிட்டுள்ளது.
புதிய டேட்டா போர்ட்டபிலிட்டி சேவை
இந்த புதிய சேவை அயர்லாந்தில் உள்ள பயனர்களுக்குக் தற்பொழுது கிடைக்கும்படி வெளியிடப்பட்டுள்ளது. பேஸ்புக் தளத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை நேரடியாகக் கூகுள் போட்டோஸ் தளத்திற்கு மாற்றம் செய்யும் சேவை உலகளாவிய பயனர்களுக்கு 2020ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டா என்கிரிப்டிங்
இந்த சேவையின் கீழ் நடைபெறும் அனைத்து டேட்டா இடமாற்றங்களும் என்கிரிப்டிங் செய்யப்படும், மேலும் கூகுள் போட்டோஸ் தளத்திற்குப் பரிமாற்றம் தொடங்கப்படுவதற்கு முன்பு பயனர்களிடம் பாஸ்வோர்டு கேட்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அதன் வலைத்தள பக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்திலிருந்தே டேட்டா போர்ட்டபிலிட்டி சேவை
பேஸ்புக் நிறுவனம் செப்டம்பர் மாதத்திலிருந்தே டேட்டா போர்ட்டபிலிட்டி சேவைக்கான ஆதரிப்பு மற்றும் அதன் சார்ந்த சேவைக்கான புதிய கருவிகளையும், சேவைகளையும் உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருந்தது.
100 மில்லியன் பயனர்கள்
சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பேஸ்புக்கிலிருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு தங்களின் டேட்டாகளை பரிமாற்றம் செய்ய முயல்கின்றனர் என்பதனால் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள்
இந்த புதிய டேட்டா போர்ட்டபிலிட்டி சேவைக்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் புதிய சேவையில் களமிறக்கப்பட்டுள்ளது என்றும், பயனர்களின் தகவல்கள் மற்றும் அவர்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு தான் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா போர்ட்டபிலிட் சேவை விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக