Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 டிசம்பர், 2019

உன்னாவ் குற்றவாளி : இன்று தண்டனை விவரம் அறிவிப்பு

உன்னாவ் குற்றவாளி : இன்று தண்டனை விவரம் அறிவிப்பு


த்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்  பேரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும்  கைது செய்யப்பட்டனர்.

சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய்,  உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது திடீரென லாரி மோதி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயும், உறவின பெண்ணும் உயிரிழந்தனர்.பாதிக்கப்பட்ட பெண்  மற்றும் வழக்கறிஞர் காயத்துடன் உயிர் தப்பினார்கள். 

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு இடையில் பாஜகவில் இருந்து குல்தீப் சிங் நீக்கப்பட்டார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்தது. உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் உ.பி.யில் இருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதனைதொடர்ந்து கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என  நீதிமன்றம் தீர்ப்புஅளித்தது.இந்நிலையில் இன்று அவரது தண்டனை விவரம் குறித்து தீர்ப்பு அளிக்கிறது டெல்லி நீதிமன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக