
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த புதுவிடுதியைச் சேர்ந்த இளங்கோவன், அருண்பாண்டியன் இருவரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் தெரிந்தது.
பின்னர் அவர்கள் திருவோணத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றபோது அவர்கள் கட்டை மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கி பல்லால் கடித்துள்ளனர்.
இதனால் மதுவிலக்கு அமலாக்கத்துறை தலைமைக் காவலர் செந்தில்குமார், ஆயுதப்படைக் காவலர் ஆல்வின் ஆகியோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தப்பியோடி தலைமறைவாக உள்ள இளங்கோவன், அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக