சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் 4ஜி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அனைத்து சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.
கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2
கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் இ சிம் மூலம் 4ஜி எல்.டி.இ கனெக்டிவிட்டி வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் கொண்டே வாடிக்கையாளர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இ சிம் சேவையை தற்சமயம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
360x360 பிக்சல் திர்மானம்
கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடல் 1.4-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 360x360 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+இவற்றுள் அடக்கம்.
எக்சைனோஸ் 9110
இந்த சாதனத்தில் எக்சைனோஸ் 9110 டூயல் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதன்பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யம் எனவும், ஐபோன் 5 அல்லது ஐ.ஒ.எஸ் 9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இ.சி.ஜி அக்செல்லோமீட்டர்
கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 சாதனத்தில் 768எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியும் இடம்பெற்றுள்ளது. பின்பு இதய துடிப்பு சென்சார்,இ.சி.ஜி அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், பாரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.
WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங்
குறிப்பாக 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G சான்று மற்றும் இ சிம், 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.0, வைபை, 340எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இவற்றுள் அடக்கம்.
கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 விலை
கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 சாதனம் சில்வர், பிளாக்,கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.35,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக