Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

வெஸ்டை துளைத்த புல்லட்.! மயிரிழையில் உயிர்பிழைத்த காவலர்!

புல்லட் வெஸ்டை துளைத்த புல்லட்.! மயிரிழையில் உயிர்பிழைத்த காவலர்!


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்தரப்பிரதேசத்தில் வலுவு பெற்று வருகிறது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியைக் காவல்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நால்பந்த் பகுதியில் கான்ஸ்டபிள் விஜேந்திர குமார் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் வன்முறையை ஈடுபட்டதால் கால்துறையினர் தடியடி நடத்தினர். இதை தொடர்ந்து கான்ஸ்டபிள் விஜேந்திர குமாரின் புல்லட் வெஸ்டை ஒரு புல்லட் துளைத்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக  உயிர்பிழைத்தார்.
`இது குறித்து விஜேந்திர குமார் கூறுகையில் , இது என்னுடைய மறுபிறவி என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டக்காரர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு புல்லட் என்னுடைய புல்லட் வெஸ்டை துளைத்தது. நல்ல வேலையாக என் பாக்கெட்டில் நான் வைத்திருந்த பர்ஸ்தான் என் உயிரைக் காப்பாற்றியது. அதில் 4 ஏடிஎம் கார்டுகள், சிவன், சாய்பாபா படங்கள் இருந்தன” என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக