2019
ஆண்டிற்கு விடை கொடுக்கும் நேரம் வந்தாச்சு. 2020 ஆம் ஆண்டை வரவேற்க இன்னும் 1
மாதம் மட்டுமே இருக்கிறது. இந்த ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் எப்படி
இருக்கப் போகிறதோ என்று யோசிக்கிறீர்களா. இதோ உங்களுக்கான ராசி பலன் படிங்க.
மேஷம்
இந்த மாதம் நீங்க
ரொம்ப கவனமாக இருக்கணும் காரணம் நிதி நிலமை உங்களுக்கு சாதகமாக இருக்காது.
யாருக்காவது பணம் கொடுத்தா அது திரும்ப வராது அப்புறம் நீங்கதான் டென்சன் ஆவீங்க.
பண விசயத்தில ஜாக்கிரதையாக இருங்க. இந்த மாதம் கல்யாண வாழ்க்கையிலும் சில ஊடல்கள்
வந்து போகும் உங்க அன்பை கொட்டினால் எல்லாமே நார்மல் ஆகிவிடும். புதுசா லவ்
பண்றவங்களுக்கு இது சாதகமில்லாத மாதம். வேலை செய்யிறவங்களுக்கு முதல் வாரம் நல்லா
இருக்கும் மாத மத்தியில் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு
வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். வயிறு பிரச்சினைகள் வரும் சாப்பாட்டு விசயத்தில
கவனமாக இருங்க.
இந்த மாதம் நெருப்பு
உங்களுக்கு நன்மை செய்யும்.
நன்மை செய்யும்
கிரகம் உங்க ராசிநாதன் செவ்வாய்
அதிர்ஷ்ட எண்:
22,34,45,52,66
அதிர்ஷ்ட நாட்கள்:
புதன், , ஞாயிறு, செவ்வாய்,வெள்ளி
அதிர்ஷ்ட நிறங்கள்:
ப்ரௌன், பிங்க், வெள்ளை, ப்ளூ
ரிஷபம்
இந்த மாதம் நீங்க
ரொம்ப டென்சனா இருப்பீங்க. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும் என்னதான் வேலை
பார்த்தாலும் உங்க சீனியர் திருப்தி அடைய மாட்டார். அவரோட டார்ச்சர் உங்களை
அப்செட் ஆக்கும். நீக்ங பிசினஸ் பண்றவராக இருந்தால் உங்க பார்ட்னர் கூட எந்த
வம்பும் வச்சிக்காதீங்க. எந்த முடிவையும் கவனமாக ஜாக்கிரதையாக எடுங்க இல்லாத உங்க
பொருளாதார நிலையில நஷ்டத்தை ஏற்படுத்திடும். மாத மத்தியில பிசினஸை
விரிவுபடுத்துவீங்க. உங்க பட்ஜெட்டிற்கு ஏற்ப பணம் வருவதற்கான வழிகளை பார்ப்பீங்க.
திருமண வாழ்க்கையில நீங்க உங்க வாழ்க்கை துணையோட சந்தோஷமாக இருப்பீங்க. மாத
ஆரம்பத்தில உங்க ஹெல்தை கவனமாக பார்த்துக்கங்க. சின்ன சின்ன பிரச்சினைகள் வரலாம்.
பஞ்சபூதங்களில் பூமி
நன்மை செய்யும்.
நன்மை செய்யும்
கிரகம் உங்க ராசிநாதன் சுக்கிரன்.
அதிர்ஷ்ட எண்: 12,
27, 33, 49, 51, 66
அதிர்ஷ்ட நாட்கள்:
புதன், ஞாயிறு, செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட நிறங்கள்:
பழுப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, நீலம்
மிதுனம்
உங்க குடும்ப
வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இந்த மாதம் நீங்க உங்க குடும்ப உறுப்பினர்கள்
கூட சந்தோஷமா ஜாலியா இருப்பீங்க. உங்க வாழ்க்கை துணையோட உறவு பலப்படும். உங்க
ரொமான்டிக் லைப் உங்க மன அழுத்தத்தை போக்கும். சில சூழ்நிலையில நீங்க உங்க
பார்ட்னரை தவறா புரிஞ்சிப்பீங்க அதனால காதல் வாழ்க்கை பிரேக் அப் ஆக கூட சான்ஸ்
இருக்கு. உங்களுக்கு இந்த மாதம் செலவு அதிகமாக இருக்கும். இந்த மாதம் வண்டி வாகனம்
வாங்குவீங்க. ஹார்ட் ஒர்க் பண்ணி உங்க திறமையை நிரூபிப்பீங்க. பிசினஸ்ல நீங்க
செய்யும் முதலீட்டுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்த மாதம் நல்லா உற்சாகமாக
இருப்பீங்க வேடிக்கை விளையாட்டுக்கள் நடக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில அக்கறை
காட்டுங்க.
பஞ்சபூதங்களில்
காற்று நன்மை செய்யும்.
உங்க ராசிநாதன் புதன்
சாதகமாக கிரகம்.
அதிர்ஷ்ட எண்:
2,8,22,39,47,51
அதிர்ஷ்ட நாட்கள்:
திங்கள், செவ்வாய், சனி,புதன்
அதிர்ஷ்ட நிறங்கள்:
க்ரீம், வெள்ளை,இளம் பச்சை,ஸ்கை ப்ளூ
கடகம்
இந்த மாதம் நீங்க
முக்கிய முடிவுகளை எடுப்பீங்க ரொம்ப கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கணும்
அப்பத்தான் நீங்க எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். மனசளவுல நீங்க ரொம்ப
ஸ்டிராங்கா இருப்பீங்க அது வெற்றிக்கு உதவியாக இருக்கும். மீடியா, கலைத்துறை,
இம்போர்ட், எக்ஸ்போர்ட் பண்றவங்களுக்கு இது நல்ல மாதம் லாபம் கிடைக்கும். புது
பிசினஸ் ஸ்டார்ட் பண்றவங்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். வேலை செய்றவங்க சீனியர்ஸ்
சொல்றதை கேட்டு நடந்துக்கங்க. ஓவரா எக்ஸைட் ஆகாதீங்க, இந்த மாதம் உங்க நிதி நிலைமை
ரொம்ப நல்லா இருக்கும். புது சொத்துக்கள் வாங்கலாம். உங்க திருமண வாழ்க்கையில
இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்க உடல் நிலையில சின்னச் சின்ன
பிரச்சினைகள் வந்து போகும். கவனக்குறைவா இருக்காதீங்க.
பஞ்சபூதங்களில் நன்மை
தரக்கூடியது நீர்.
நன்மை தரும் கிரகம்
உங்க ராசிநாதன் சந்திரன்
அதிர்ஷ்ட எண்:
6,9,20,33,49,56
அதிர்ஷ்ட நாட்கள்:
செவ்வாய், திங்கள், சனி, புதன்
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெளிர் பச்சை, வானம், கிரீம், வெள்ளை
சிம்மம்
வேலை செய்யிற இடத்தில
ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ண வேண்டியிருக்கும். அது உங்களுக்கு மன அழுத்தத்தை
அதிகமாக்கும். உங்க வேலையில போகஸ் பண்ணுங்க. மாத மத்தியில உங்க பிரச்சினைகள்
தீர்ந்து உங்களை நிம்மதி பெருமூச்சு விட வைக்கும். இந்த மாதம் உங்க வருமானம்
அதிகமாகும். பிசினஸ் பண்றவங்க பெருசா முதலீடு பண்ணி வேலையை விரிவு படுத்துவாங்க.
உங்க பெர்சனல் வாழ்க்கையில பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உங்க திருமண
வாழ்க்கையில அது இடைவெளியை ஏற்படுத்தும் பேச்சில கவனமாக இருங்க. மாத இறுதியில உங்க
பழைய நண்பர்களோட அவுட்டிங் போவீங்க. அது உங்க மன அழுத்தத்தை குறைக்கும்.
பஞ்சபூதங்களில்
நெருப்பு நன்மை செய்யும்
உங்க ராசிநாதன்
சூரியன் நன்மை செய்யும் கிரகம்
அதிர்ஷ்ட எண்:
1,8,11,26,37,44
அதிர்ஷ்ட நாட்கள்:
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, வியாழன், புதன்
அதிர்ஷ்ட நிறங்கள்:
க்ரீம், ஸ்கை ப்ளூ, இளம் மஞ்சள், பச்சை, மெரூன்
கன்னி
நீங்க இந்த மாதம்
ரொம்ப சீரியஸ் ஆக உங்க வேலையை முடிப்பீங்க. ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. பெரிய
சாதனைகளை செய்வீங்க. இந்த செயல்தான் உங்க புரமோசனுக்கும், சம்பள உயர்வுக்கும்
காரணமாக அமையப்போகிறது. வேலை விசயமாக வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் உங்க குடும்ப வாழ்க்கையில மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மாத மத்தியில உங்க அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அதுவே வெற்றியை தேடித்தரும். சமூக
அக்கறையோடு நீங்க செய்யும் வேலை உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரும். உங்க நிதி
நிலைமை அற்புதமாக இருக்கும். உங்க உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.
நன்மை செய்யும்
பஞ்சபூதம் பூமி.
உங்களுக்கு உங்க
ராசிநாதன் புதன் நன்மை செய்யும்.
அதிர்ஷ்ட எண்: 4, 9,
18, 25
அதிர்ஷ்ட நாட்கள்:
செவ்வாய், வெள்ளி, சனி, திங்கட்கிழமை
அதிர்ஷ்ட நிறங்கள்:
ப்ரௌன், மஞ்சள், இளம் சிவப்பு,ப்ளூ
துலாம்
இந்த மாதம்
உங்களுக்கு சில சவால்கள் வரலாம். குடும்ப விசயத்தில சில முக்கிய முடிவுகளை
எடுப்பீங்க. ரொம்ப கோபப்படாதீங்க. ஈகோவை விட்டுத்தள்ளுங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு
இது ரொம்ப நல்ல மாதம். சட்டம் தொடர்பான விசயங்களில் உங்களுக்கு வெற்றியும்
நிம்மதியும் கிடைக்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். நல்லா படித்து தேர்வு
எழுதுவீங்க. திருமண வாழ்க்கையில சில ஊடல்கள் வந்து போகும். அதிகமாக கோபப்படாதீங்க.
அதுவே உங்களுக்கு இடைவெளியை ஏற்படுத்தி விடும். சிலருக்கு காதல் வாழ்க்கை
சந்தோஷமாக இருக்கும். சிங்கிள்ஸ் சிலருக்கு காதல் மலரும். பணம் வருமானம்
சுமார்தான். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. ரொம்ப நேரம் காலி வயிறோட
இருக்காதீங்க நேரத்திற்கு சாப்பிடுங்க இல்லாட்டி அல்சர் வந்துடும்.
பஞ்ச பூதங்களில்
காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.
சுக்கிரன் உங்களுக்கு
சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்:
7,10,12,24,35,44,58
அதிர்ஷ்ட நாட்கள்:
செவ்வாய், புதன், திங்கள், ஞாயிறு
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, பர்ப்பிள், ப்ரௌன், அடர் சிவப்பு
விருச்சிகம்
இந்த மாதம் நீங்க
உங்க ப்ரண்ட்ஸ் உடன் சந்தோஷமாக என்ஜாய் பண்ணுவீங்க. உங்க காதல் வாழ்க்கை
உங்களுக்கு சம்திங் ஸ்பெஷல் ஆக அமையும். நீங்க சிங்கிளாக இருந்தா உங்களுக்கு இந்த
மாதம் காதல் மணியடிக்கும் மனசுக்கு பிடிச்ச ஜோடியை முதல் பார்வையிலேயே பார்த்து
ஓகே பண்ணிடுங்க. கல்யாணமானவங்களுக்கு இந்த மாதம் ரொம்ப ரொமாண்டிக் ஆக இருக்கும்.
வேலை விசயத்தில இந்த மாதம் நீங்க சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்க
பண்ற ஹார்ட் ஒர்க் உங்க சீனியர்ஸ் உடைய ஹார்ட்டை டச் பண்ணும். இந்த மாதம்
வியாபாரிகளுக்கு லாபம் நிறைய வரும். பொருளாதார நிலைமை ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவே
இருக்கும். தேவையில்லாத பொருட்களை வாங்காதீங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை
செலுத்துங்க.
பஞ்ச பூதங்களில்
தண்ணீர் உங்களுக்கு நன்மை செய்யும்.
நன்மை தரும் கிரகம்
செவ்வாய் மற்றும் புளூட்டோ.
அதிர்ஷ்ட எண்: 2, 15,
26, 37, 49, 56
அதிர்ஷ்ட நாட்கள்:
செவ்வாய், ஞாயிறு,சனி,வியாழன்
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், ஊதா, மெரூன், அடர் பச்சை
தனுசு
நீங்க மகிழ்ச்சியா
இருக்கணும்னா முதல்ல உங்க மைண்ட்ல இருந்து நெகடிவ்ஆக நினைப்பதை ரிமூவ் பண்ணுங்க.
உங்க தன்னம்பிக்கையும் தைரியத்தையும் அதிகப்படுத்துங்க அப்புறம்தான் உங்களுக்கு
வெற்றி கிடைக்கும். உங்களுக்கு வேலை விசயமாக நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
நிறைய வேலை பிரசர் இருக்கும். உங்க முன்னாடி இருக்கிற டார்கெட்டை முடிக்க நிறைய
ஹார்ட் ஒர்க் பண்ணுவீங்க. உங்க வெற்றிக்காக நீங்க நிறைய மெனக்கெடுவீங்க. அது உங்க
மன அழுத்தத்தையும் கோபத்தையும் அதிகப்படுத்தும். இந்த மாதம் உங்க குடும்பத்திலயும்
சாதகமில்லாத சூழ்நிலைதான் இருக்கு. நீங்க கம்முன்னு இருந்தா போதும் இந்த மாசத்தை
எந்த பிரச்சினையும் இல்லாம ஜம்முன்னு கடந்திடலாம். உங்க தரப்பு நியாயத்தை உங்க
குடும்ப உறுப்பினர்கள் புரிஞ்சுக்குவாங்க. நிதி நிலவரம் இந்த மாதம் உங்களுக்கு
சாதகமாக இருக்கும். இந்த மாதம் நீங்க உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டிஸ்டர்ப்
ஆகவே இருப்பீங்க கவனமாக இருங்க.
பஞ்சபூதத்தில்
நெருப்பு உங்களுக்கு சாதகமானது.
குரு உங்களுக்கு
சாதகமான கிரகம்.
அதிர்ஷ்ட எண்:
2,8,13,18,29,33,45
அதிர்ஷ்ட நாட்கள்:
ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை,பிங்க், ப்ளூ, வெள்ளை
மகரம்
இந்த மாதம்
உங்களுக்கு ரொம்ப முக்கியமான மாதம். நிறைய சீரியஸ் விசயங்களை சால்வ் பண்ணுவீங்க.
சரியான நேரத்தில சரியான முடிவுகளை எடுப்பீங்க. வேலையில ரொம்ப நல்லா இருக்கும்.
ஹார்ட் ஒர்க் பண்றவங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். நிறைய பேர் ப்ரமோசன்
கிடைச்சு வெளிநாடு போவீங்க. வியாபாரம் பண்றவங்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். எல்லா
நல்ல விசயங்களும் மடமடன்னு முடியும். குடும்பம் அமைதியாக சந்தோஷமாக இருக்கும்.
உங்க குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். உங்க வாழ்க்கை துணைக்கு நிறைய
சர்ப்ரைஸ் கொடுப்பீங்க. உங்க பிள்ளைகள் விசயத்திலும் நிறைய சந்தோஷத்தை அனுபவிப்பீங்க.
தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்துடுங்க நல்லதே நடக்கும்.
பஞ்சபூதங்களில் பூமி
சாதகமானது.
சாதகமான கிரகம் உங்க
ராசிநாதன் சனி.
அதிர்ஷ்ட எண்:
2,6,16,20,36,41,55
அதிர்ஷ்ட நாட்கள்:
புதன், திங்கள், சனி, வெள்ளி
லக்கி நிறங்கள்:
மஞ்சள், மெரூன்,க்ரீம், பர்ப்பிள், ஆரஞ்ச்
கும்பம்
இந்த மாதம் நீங்க
ரொம்ப உணர்ச்சிகரமாகவே இருப்பீ
ங்க. காரணம் ஒரு முக்கியமான நபர் உங்க
வாழ்க்கைக்குள் எண்ட்ரி கொடுப்பார். உங்க ரொமான்டிக் லைப் ரொம்ப சந்தோஷமாக ஜாலியா,
உற்சாகமாக இருக்கும். உங்க உறவு ரொம்ப ஸ்டிராங் ஆகும். உங்க லவ் பார்ட்னர் உங்களை
திருமணத்திற்கு சம்மதம் கேட்பார். கல்யாணம் ஆகாத சிங்கிள் பசங்களுக்கு கமிட்
ஆகக்கூடிய நல்ல மாதம் இது. உங்க சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ் இனி உற்சாகமாக இருக்கப்
போகுது. புதிய வேலைக்காக காத்திருப்பவங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். பிசினஸ்
பண்றவங்களுக்கு ரொம்ப நல்ல மாதம் வேலை செய்யுறவங்களுக்கு சீனியர்ஸ் உதவி
கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. பணமும் தாராளமாக
புரளும். மிகப்பெரிய அளவில முதலீடு பண்ணுவீங்க. உங்க உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்
அது நீடிக்கணும்னா தேவையில்லாத பாரத்தை இழுத்து போட்டுக்காதீங்க.
பஞ்சபூதங்களில்
காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.
சாதகமான கிரகம் சனி.
உங்க ராசிநாதன் சனி நன்மை செய்யும். யுரேனஸ் ஒத்துழைப்பு கொடுக்கும்.
அதிர்ஷ்ட எண்:
3,4,7,14,17,28,31,49,57
அதிர்ஷ்ட நாட்கள்:
ஞாயிறு, வெள்ளி, புதன், சனிக்கிழமை
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஸ்கை ப்ளூ, பிங்க்,ப்ளூ, மஞ்சள்,அடர் சிவப்பு
மீனம்
மீனம் ராசிக்காரங்க
இந்த மாதம் வேலையில கண்ணும் கருத்துமாக இருக்கணும். வேலை செய்யிறவங்களுக்கு நிறைய
பிரசர் இருக்கு. புதிய புதிய அசைன்மெண்ட் வரும். பிசினஸ் பண்றவங்க கண்ணை மூடிட்டு
இன்வெஸ்ட் பண்ணாதீங்க. முக்கியமா நீங்க உங்க கோபத்தை கட்டுப்படுத்தணும் இல்லாட்டி
நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்க திருமண வாழ்க்கையில கணவன்
மனைவி விட்டுக்கொடுத்து போனால் மட்டுமே சந்தோஷமா இருக்க முடியும். உங்க வாழ்க்கை துணையோட
ஃபீலிங்சை புரிஞ்சுக்கங்க. சின்ன சின்ன பிரச்சினைகள் கூட பெரிய அளவில் விரிசலை
ஏற்படுத்திடும் ஜாக்கிரதை. எந்த பிரச்சினையையும் குடும்பத்தோட உட்கார்ந்து பேசுங்க
உறவு நல்லா இருக்கும். இந்த மாதம் உங்க நிதி நிலைமை அப்படி ஒன்னும் நல்லா
இருக்காது. எந்த பெரிய முடிவு எடுப்பதற்கு முன்னாடியும் நல்லா ப்ளான் பண்ணுங்க.
இந்த மாதம் ஒரே ஆறுதல் உங்க உடல் நலம் நல்லா இருக்கும் ஆனாலும் ஆரம்பத்தில சின்னச்
சின்ன நோய்கள் எட்டிப்பார்க்கும்.
பஞ்சபூதங்களில் நீர்
நன்மை செய்யும்.
நன்மை செய்யும்
கிரகம் குரு , நெப்டியூன்.
அதிர்ஷ்ட எண்:
5,16,25,34,46,58
அதிர்ஷ்ட நாட்கள்:
ஞாயிறு, திங்கள், புதன், சனி
அதிர்ஷ்ட நிறங்கள்:
வானம், இளஞ்சிவப்பு, நீலம், மஞ்சள், அடர் சிவப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக