திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மாமூன். இவர்
ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலைபார்த்து வருகிறார். இவர்
ஆயிரம்விளக்கு காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் போலீஸார்
விசாரித்தனர். என்னைக் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கூறினார். உடனே புகாராக எழுதித்தரும்படி போலீஸார் கூறினர். அதன்பேரில் மாமூல்
கடத்தல் சம்பவத்தை புகாராக எழுதிக்கொடுத்தார்.
அந்தப் புகாரில், ``சம்பவத்தன்று நான் தங்கியிருக்கும்
ஆயிரம்விளக்கு பகுதிக்கு என்னுடன் அண்ணாசாலையில் உள்ள திரையரங்கில் வேலைபார்த்த
சஞ்சய் வந்தார். பிறகு அவர் என்னை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு பூந்தமல்லி
காட்டுப்பாக்கம் பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு அறையில் என்னை அடைத்துவைத்தனர்.
பிறகு திரிபுராவில் உள்ள என்னுடைய அம்மாவுக்கு போன் செய்து,` உங்கள் மகனை
கடத்திவிட்டோம். நீங்கள் உடனடியாக 2 லட்சம் ரூபாயை நாங்கள் கூறும் வங்கி
அக்கவுன்டில் போடுங்கள். இல்லையென்றால் உங்கள் மகனை உயிரோடு பார்க்க முடியாது.
மேலும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவ்வளவுதான்' என மிரட்டினர்"
என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மாமூனிடம் உங்களைக்
கடத்தியவர்களிடமிருந்து எப்படி தப்பி வந்தீர்கள் என்று போலீஸார் கேட்டதற்கு ``அவர்களாகவே
கடத்தினார்கள், என் அம்மாவிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டார்கள். அதற்கு என் அம்மா என்னிடம்
அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். அதனால் 2 லட்சம் ரூபாயில் தொடங்கிய பேரம் இறுதியில்
20,000 ரூபாய்க்கு வந்தது. 20,000 ரூபாயும் இல்லை என்று அம்மா கூறியதால் என்னை அடித்தார்கள்.
பின்னர் ஆட்டோ மூலம் என்னை ஆயிரம்விளக்கு பகுதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்"
என்று கூறியுள்ளார்.
என்னுடைய அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மகனை
கடத்திவிட்டோம். நீங்கள் உடனடியாக 2 லட்சம் ரூபாயை நாங்கள் கூறும் வங்கி
அக்கவுன்டில் போடுங்கள். இல்லையென்றால் உங்கள் மகனை உயிரோடு பார்க்க முடியாது.
மேலும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவ்வளவுதான் என்று மிரட்டினர்
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீஸார்
மாமூனைக் கடத்தியவர்கள் குறித்து விசாரித்துவருகின்றனர். மாமூன் கூறிய வங்கி
அக்கவுன்ட் திரிபுராவைச் சேர்ந்தது. மேலும், மாமூனுக்கு வந்த போன் அழைப்புகள்,
அவரின் அம்மாவிடம் பணம் கேட்ட கடத்தல்காரர்களின் போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு
செய்துவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``வழக்கமாக யாரையாவது
கடத்தினார்கள் என்றால் கடத்தப்பட்டவரின் குடும்பத்தினர்கள்தான் காவல் நிலையத்தில்
புகார் கொடுப்பார்கள். ஆனால், இந்தச் சம்பவத்தில் கடத்தப்பட்ட நபரே புகார்
கொடுத்துள்ளார். இதனால் கடத்தப்பட்ட நபரிடம் நீண்ட விசாரணை நடத்தியுள்ளோம். மாமூனை
கடத்தியதாகச் சொல்லப்படும் சஞ்சயிடம் விசாரித்தால்தான் என்ன நடந்தது என்பது
தெரியவரும்
இந்த வழக்கில் திரிபுராவைச் சேர்ந்த சஞ்சய் மட்டுமல்லாமல்
இன்னும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை
நடந்துவருகிறது" என்றனர். இதற்கிடையில் மாமூன் கடத்தல் சம்பவம் நாடகமாகக்கூட
இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக