Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 டிசம்பர், 2019

ஆஃப்ரிக்காவிலிருந்து டெல்லிக்கு வரும் பாலியல் தொழிலாளர்கள்; ஒரு அதிர்ச்சி தகவல்


ஃப்ரிக்காவிலிருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு பாலியல் தொழிலாளர்கள் அனுப்ப்படுவதாக ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

பிபிசி ஆஃப்ரிக்கா ”ஐ” என்னும் செய்தி நிறுவனம் ஆஃப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஆஃப்ரிக்க ஆண்களுக்காக அனுப்பப்படும் பாலியல் தொழிலாளர்களின் நெட்வொர்க்கை உலகத்திற்கு கொண்டுவந்துள்ளது. ஆஃப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பாலியல் தொழிலுக்காக கொண்டு வரப்பட்ட கிரேஸ் என்னும் பெண்மணி இந்த நெட்வொர்க்கை பற்றிய செய்திகளையும் அனுபவங்களையும் தெரிவிக்கிறார்.

கிரேஸ் இந்தியாவின் புது டெல்லி நகருக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு இது ஒரு கொடுங்கனவாக இருக்கப்போகிறது என்பதை அவர் முன்னமே உணர்ந்திருந்தார். கிரேஸின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு அவர் இந்தியா வந்ததற்கான பயண செலவை கட்டினால் தான் அவரை விடுதலை செய்யபமுடியும் என கூறியுள்ளனர். இது கிரேஸ் போன்று பல பெண்களுக்கும் நடைபெறுகிறது.

ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு அந்த கடனை தீர்க்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. சுமார் 3700 டாலரிலிருந்து 5800 டாலர் வரை இந்த கடன் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. ”கடன்” என்று இவர்களால் சொல்லப்படுவதை திரும்ப செலுத்துவதற்கு அப்பெண்களுக்கு வேறு வழியும் இல்லாமல் போகிறது.


புது டெல்லியில் இருக்கும் ரகசிய மது விடுதிகளில் தினமும் இரவு இதற்கான சந்திப்பு நடைபெறுகிறது. இந்த ரகசிய விடுதிகளை “கிச்சன்ஸ்” என்று அழைக்கிறார்கள். அதில் ஆஃப்ரிக்க ஆண்கள் முன் இந்த பெண்கள் நிறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் பெண்களை தேர்வு செய்கிறார்கள். பின்பு தேர்வு செய்த பெண்களை, ஆஃப்ரிக்க ஆண்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து சென்று உறவு கொள்கிறார்கள்.

குறிப்பாக இப்பெண்களெல்லாம், கிழக்கு மற்றும் மேற்கு ஆஃப்ரிக்காவை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பல பெண்கள் தங்களுடைய கடன்கள் செலுத்தப்பட்ட பின்பும் இங்கேயே அகப்பட்டுக் கொண்டுவிடுகிறார்களாம். முடிவில் அவர்களின் விசாக்கள் காலாவதியாகி சட்டவிரோதமாக குடியேறியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

கிரேஸ் தான் ஆறு மாதங்களாக அவர் தங்கிய அறைகளை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். மதுவுக்குள்ளும், பாலியல் தொழிலுக்குள்ளும் சிக்கிய கிரேஸ், இந்த கொடுங்கனவுகள் முடிவுக்கு வருமா என்ற சிந்தனையில் உள்ளார். இது குறித்து கிரேஸ், “வேறு யாருக்கும் என்னுடைய இந்த நிலை வந்துவிடக்கூடாது, நான் இந்த கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என வருத்தத்துடன் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக