Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

அமெரிக்காவில் முதன்முதலாக விண்வெளி படை உருவாக்கம்!

அமெரிக்காவில் முதன்முதலாக விண்வெளி படை உருவாக்கம்!


மெரிக்காவில் முதன்முதலாக அவிண்வெளி படை உருவாக்கி இருப்பது பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முதன்முதலாக விண்வெளி படை தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு ‘ஸ்பேஸ் போர்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு முதல் ஆண்டு செலவினத்துக்காக 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ.280 கோடி) ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த புதிய படையை உருவாக்கி இருப்பது குறித்து மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறும்போது, உலகிலேயே மிகவும் புதிய படை விண்வெளி படை ஆகும். நமது தேச படைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருக்கிற நிலையில், விண்வெளியில் அமெரிக்காவின் உயர்ந்த நிலை மிகவும் முக்கியம். 

இந்த படை மூலம் விண்வெளிப்படை ஆக்கிரமிப்பை தடுக்கவும், இறுதி நிலத்தை கட்டுப்படுத்தவும் எங்களுக்கு உதவும் என குறிப்பிட்டு உள்ளார்.
இது அமெரிக்க சொத்துகளை பாதுகாக்கும், நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களைப் போல தகவல் தொடர்பு கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் 
என்று வா‌ஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன. இந்த படைக்கு விமானப்படை தளபதி ஜே ரேமாண்ட் தலைமை தாங்குவார்; 16 ஆயிரம் வீரர்களை கொண்டிருக்கும் என விமானப்படை அமைச்சர் பார்பரா பேரட் கூறி உள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக