குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் எனவே இந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அனைத்து அசாம் மாணவர் சங்கம், ரிகாய் பஞ்ச், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே ,நீதிபதி காவை,சூர்யா காந்த் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு நடத்தியது.அப்பொழுது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். சட்டதிருத்தத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 22 -ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக