ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அடுத்த
கட்டமாக விவசாய பொருட்கள் வர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னனியில் இருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தின் கிளை ஸ்தாபனமாகும். இந்தியாவில் விழாக்கால விற்பனைகளில் எக்கசக்கமாக விற்பனை செய்து கோடிகளில் வணிகம் செய்து வரும் ஃப்ளிப்கார்ட் தனது ஆன்லைன் விநியோகத்தின் அடுத்த கட்டமாக விவசாய பொருட்கள் விற்பனையில் ஈடுபட உள்ளது.
இந்தியா முழுவதும் விவசாய உணவு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வரும் நிஞ்சாகார்ட்டில் வால்மார்ட் முதலீடு செய்துள்ளது. எவ்வளவு சதவீத பங்குகளை வாங்கியுள்ளது என்பது தெரியாத போதிலும் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
தனியாக இயங்கி வந்த ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை 77 சதவீத பங்குகளை வாங்கி தனது கிளை நிறுவனமாக மாற்றியது வால்மார்ட். அதுபோல நிஞ்சாகர்ட்டையும் கிளை நிறுவனமாக மாற்ற வால்மார்ட் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆன்லைன் வர்த்தக தளங்கள் விவசாய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபாடு காட்டுவது உள்ளூர் வணிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக