சென்னையில் ராட்டினத்தில் தலை சிக்கிய சிறுமியை
மீட்காமல் தப்பிய ஓடிய ஆப்பரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான விளையாட்டு பூங்கா உள்ளது. அங்கு உள்ள ராட்டினம் ஒன்றில் சிறுமி ஏறியுள்ளார். ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமியின் தலை ராட்டினத்தின் பக்கவாட்டில் சிக்கி கொண்டது. அருகிலிருந்தவர்கள் கூச்சலிடவும் ராட்டினத்தின் ஆப்பரேட்டர் தப்பித்து ஓடி விட்டார்.
சம்பவம் அறிந்து உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்து நேரத்தில் சிறுமியை காப்பாற்றாமல் ஓடிய ஆபரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக