Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 டிசம்பர், 2019

சிறுநீரக கல்லை கரைக்கும் வெங்காய சாறு குறித்து ஒரு பார்வை!

சிறுநீரக கல்லை கரைக்கும் வெங்காய சாறு குறித்து ஒரு பார்வை!
முடி வளர்ச்சி தவிர, வெங்காயமும் வயிற்று வலியைப் போக்க மிகவும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது.
உண்மையில் வெங்காயத்தில் வைட்டமின்கள் A, B6, C மற்றும் E, சல்பர், குரோமியம், இரும்பு போன்ற கூறுகள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 
பலவகையில் நமக்கு ஆரோக்கியம் அளிக்கும் வெங்காயத்தின் நன்மைகளை குறித்து இன்று நாம் அறிந்துக்கொள்வோம். 
முடி வளர்ச்சி: முடியை அதிகரிக்க, ஆமணக்கு எண்ணெயில் வெங்காய சாறு சேர்த்து உங்கள் தலைமுடியின் வேர்களில் சரியாக தடவவும். இந்த கலவையை தலைமுடியில் தவறாமல் பயன்படுத்துவதன் மூலம், முடி வளர்ச்சி நன்றாக வளர ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் நல்ல மாற்றத்தை நாம் பார்க்கலாம். ஆமணக்கு எண்ணெயைத் தவிர, வெங்காய சாற்றில் தேங்காய் எண்ணெயையும் சேர்த்து உங்கள் தலைமுடியில் தடவுவதும் பலன் அளிக்கும்.
உணவை சரியாக ஜீரணிக்க உதவும்: உணவை சரியாக ஜீரணிக்க இயலாதவர்கள் வெங்காய சாறு குடித்தல் நல்லது. வெங்காய சாறு குடிப்பதன் மூலம் உணவு சரியாக ஜீரணிக்கப்படுகிறது. உணவுக்குப் பிறகு, வெங்காய சாற்றில் மஞ்சள் சேர்த்து குடித்தல் நல்ல ஜீரண சத்தியை அளிக்கும்.
முடி உறுதியாக இருக்க வேண்டும்: தலைமுடி பலவீனமாக இருப்பதோடு எளிதில் உடையும் தன்மை கொண்டிருந்தால், அந்த நபர் தங்கள் தலைமுடிக்கு வெங்காய சாறு பயன்படுத்துவது நல்லது. கூந்தலில் வெங்காய சாறு தடவினால் முடி வலுவடையும், அவற்றின் வீழ்ச்சியும் குறையும் என கூறப்படுகிறது.
பொடுகு: பொடுகுக்கு வெங்காய சாறு ஒரு நல்ல தீர்வாகும். வெங்காய சாற்றை தயிரில் கலந்து, தலைமுடியில் தடவி வருவது குறிப்பிடத்தக்க மாற்றத்தை அளிக்கும். வெங்காயம் மற்றும் தயிர் கலந்த கலவையினை தடவினால் பொடுகு நீங்கும் மற்றும் முடி மென்மையாகிவிடும்.
உங்களுக்கு கால வலி, வயிற்று வலி இருக்கும்போது வெங்காய சாறு குடிக்கவும். வெங்காய சாறு குடிப்பதன் மூலம் இந்த வலி குணமடையும். பெண்களுக்கு வயிற்று வலி இருந்தால், ஒரு ஸ்பூன் வெங்காய சாறுடன் தேன் கலந்து குடிப்பது நல்லது. இந்த சாற்றை குடித்தவுடன் வலி மறைந்துவிடும். வெங்காய சாறினை குடிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேனுக்கு பதிலாக வெங்காய சாற்றில் சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கண்களை சுத்தம் செய்ய: கண்களில் வெங்காய சாறு ஊற்றுவதன் மூலம் கண்கள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு கண்களில் இருக்கும் அழுக்கு வெளியே வரும். எனவே, கண்ணில் தூசி அல்லது அழுக்கு இருந்தால், நீங்கள் வெங்காய சாறு பயன்படுத்துதல் நல்லது.
சிறுநீரகத்தில் கல் இருந்தால், தினமும் ஒரு ஸ்பூன் வெங்காய சாறு குடிக்கவும். வெங்காய சாறு குடிப்பதன் மூலம், சிறுநீரகத்தில் சேமிக்கப்பட்ட கற்கள் வெளியே வந்து இந்த நோயிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக