சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு
மக்களின் வாட்ஸ்ஆப் கணக்குகளை பெகாஸஸ் என்னும் ஸ்பைவேர் உளவு பார்த்து மிகப்பெரிய
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 1400வாட்ஸ்ஆப்
கணக்குகள் உளவு பார்க்கப்பட்டன. குறிப்பாக இதில் இந்தியாவை சேர்ந்த 121முக்கிய
நபர்களின் கணக்குகள் அடங்கும்.
இப்போது
அலுவலக வேலைகள் தொடங்கி அனைத்துமே வாட்ஸ்ஆப்-ல் தான் என்பதால் இந்த விவகாரம்
பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் டெலிகிராம் போன்று
தகவல்களை பரிமாகொள்ள தனக்கென பிரத்யேச் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது.
குறிப்பாக
இந்த செயலிக்கு ஜிம்ஸ் -GIMS(government instant messaging system) என்று
பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி தற்போது ஒடிசா போன்ற மாநிலங்களில் சோதனை
கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதன்பின்பு
கேரளாவில் இருக்கும் தேசியத் தகவலியல் மையத்தில் இந்த செயலியின் உருவாக்கமும்
ஆராய்ச்சியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது வரை அலுவலங்களில்
தொலைபேசி தொடர்புக்காக மட்டுமே பிரத்யேக இன்டர்காம் வசதி இருந்துவந்தது. ஆனால்
இன்றைய உலகத்தில் தகவல்களைப் பரிமாறக்கொள்ள பெரும்பாலும் இதர நாட்டு செயலிகளையே
நாடவேண்டியதாக இருந்தது.
எனவேதான
இந்திய அரசானது, மத்திய அரசு அலுவலகங்களிலும் மாநில அரசு அலுவலகங்களிலும்
தங்களுக்குள் தகவல்கள் பரிமாற்றத்திற்கென இந்த ஜிம்ஸ் ஆப்பை உருவாக்கி வருகிறது.
இதன்மூலம் வெளிநாட்டு செயலிகளால் ஏற்படும் தகவல் திருட்டு மற்றும் ஊடுருவலைத்
தடுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக இதிலும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்று
எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன் முறையில்தான் தகவல்கள் பரிமாற்றப்படும்.
இந்த
ஜிம்ஸ் ஆப் இந்தியாவில் உருவாக்கப்படுவதால் மிகுந்த பாதுகாப்பான செயலியாகக்
கருதப்படுகிறது.
மேலும் இதன் சோதனைப் பயன்பாடானது தேசியத் தகவலியல் மையத்தில்
பணிபுரியும் பணியாளர்களிடையே உட்தகவல் பரிமாற்றத்திற்காக நடத்தப்பட்டது. பின்னர்
ஒடிசாவின் நிதித்துறையிலும் தற்போது கப்பல் படையிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஜிம்ஸ்
செயலியைப் பயன்படுத்தி அலுவலகத்தில் பணிபுரிவோரிடம் தனிநபர் தகவல்களையும், குழு
தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். இதனுடன் மேலதிகாரிகளுடன் பணி சம்பந்தமான
ஆவணங்களையும் தகவல்களையும் பரிமாற்றிக்கொள்ள பிரத்யேக வசதியும் இதில் உள்ளது.
பாதுகாப்பு
பிரச்சனைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை சாரமல் இருக்கவேண்டும் என்ற
கருத்துகள் அடிப்படையாக வைத்து இந்த செயலி உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கதுதான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக