Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 ஜனவரி, 2020

ஆவணம் இல்லாத காருக்கு ரூ.27 லட்சம் அபராதம்! இதுதான் நாட்டிலேயே அதிகபட்சம்!

டந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளதை னையடுத்து போதையில் வாகனம் ஓட்டுதல், ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவது, சாலை விதிகளை மீறுவது போன்றவைகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது.

பலசமயம் வண்டியின் விலையை விட அபராதத்தொகை அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் அடைந்த சம்பவங்களும் உண்டு இந்த நிலையில் நாட்டிலேயே அதிகபட்ச அபராதமாக கார் உரிமையாளர் ஒருவருக்கு ரூ.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் பதிவு எண் இல்லாத கார் ஒன்றுக்கு போக்குவரத்து காவல்துறையினர் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதற்கான நோட்டீசுடன் காரின் உரிமையாளர் ரஞ்சித் தேசாய், அபராதம் செலுத்தச் சென்றபோது அவருடை காரின் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், காருக்கு வாழ்நாள் வரி செலுத்தப்படாமல் இருந்ததை கண்டுபிடித்து அதற்கு 16 லட்சம் ரூபாய் அபராதமும், அந்தத் தொகைக்கு வட்டியாக 7 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயும் விதித்தனர்.

மேலும் இவை தவிர அபராதமாக 4 லட்சம் ரூபாயும் செலுத்துமாறு அதிகாரிகள் கூறினர். இந்த வகையில் ரஞ்சித் தேசாயிடம் மொத்தம் 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த தொகைதான் நாட்டிலேயே மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்பட்ட அதிகப்பட்ச அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக