Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

ஒரே நாளில் 78,000க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு.!

ஒரே நாளில் 78,000க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு.!



த்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில், அதன் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அந்த விருப்ப ஓய்வு பெற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 786 பேர் பணியாற்றிய நிலையில், 78569 பேர் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.
இந்நிலையில், இதேபோல் மும்பை, டெல்லி தொலைபேசி சேவைகளை கவனிக்கும் அரசுத்துறை நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனத்தில் இருந்து 14378 பேர் பணியிலிருந்து அவர்கள் விருப்பத்தில் ஓய்வு பெறுகின்றனர். இதனிடையே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பல ஊழியர்கள் இன்று ஓய்வு பெறுவதால் அந்நிறுவனத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!