Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

மனதை கொள்ளை கொள்ளும்.. தேங்காய்ப்பட்டினம் கடற்கரை..!

Image result for மனதை கொள்ளை கொள்ளும்.. தேங்காய்ப்பட்டினம் கடற்கரை..!"

ன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 54கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து ஏறத்தாழ 31கி.மீ தொலைவிலும், மார்த்தாண்டத்திலிருந்து ஏறத்தாழ 14கி.மீ தொலைவிலும் அமைதியான சூழலில் அமைந்துள்ள இடம் தான் தேங்காய்ப்பட்டினம் கடற்கரை.

சிறப்புகள் :

 தேங்காய்ப்பட்டினம் கடற்கரை கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 அரபிக் கடலில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதி முழுவதும் தென்னை மரங்கள் சூழ்ந்து இயற்கை எழிலோடு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

 நாம் குடும்பத்துடன் சென்று கடற்கரைப் பகுதியில் ஆனந்தமாக அலைகளோடு விளையாடுவதற்கு ஏற்ற சுற்றுலாத் தலமாக இந்த கடற்கரை விளங்குகிறது.

 அழகான இந்தக் கடற்கரையில் வெள்ளை மணல்கள் பரந்து விரிந்து பார்ப்பதற்கு நம் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் அமைந்திருக்கும்.

இந்தக் கடற்கரையை தேங்காய்ப்பட்டினம் காயல் என்று அழைப்பார்கள்.

 இங்குள்ள படகுகளில் சவாரி செய்வது தனிப்பரவசமாக இருக்கும். கடலின் அழகுகளையும், அவற்றில் சூழ்ந்திருக்கும் தென்னை மரங்களின் காட்சிகளையும் கண்டு ரசித்துக் கொண்டு படகுகளில் ஆனந்தமாக சவாரி செய்யலாம்.

 தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் முக்கிய ஆறான தாமிரபரணி ஆறு கலக்கின்றது.

 இந்தக் கடற்கரைக்கு நீங்கள் சென்றால் கண்களை கவரும் வகையில் அழகான இயற்கையோடு அமைந்திருக்கும் கடற்கரை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

எப்படி செல்வது?

 நாகர்கோவிலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?

 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

 நாகர்கோவிலில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

இதர சுற்றுலாத் தலங்கள் :

மகாத்மா காந்தி மண்டபம்.
 பத்மநாபபுரம் அரண்மனை.
 திற்பரப்பு நீர்வீழ்ச்சி.
 மாத்தூர் தொட்டிப்பாலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!