கைரேகையில் துடுப்பு கை அமைப்பு உள்ளவர்களின் குணநலன்களை பற்றி அறிந்து கொள்வோம்.
துடுப்புக் கைகள் நீள சதுரக் கைகள் என்றும், வலிமைக் கைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
கையின் அமைப்பு :
இந்த கைகள் உடையவர்களுடைய விரல்களின் நுனி சிறிது அகலமாக காணப்படும்.
இவர்களின் கைகள் மிக மிருதுவாகக் காணப்படும். பொதுவாக நீண்டு காணப்படும்.
குண நலன்கள் :
இவர்கள் எடுத்த காரியத்தை முடிக்கும் வரை உணவு, உறக்கமின்றி செயல்படுவார்கள்.
மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள். தேவையற்ற நட்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
நினைத்ததை முடிப்பவர்களாக இருப்பார்கள். அத்துடன் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடத்தில் நல்ல பேச்சாற்றல் இருக்கும். பிறரைக் கவர்வதில் வல்லவர்கள். சிறிது உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்றாலும் அமைதியானவர்கள்.
மற்றவர்களிடம் நாணயமாக நடந்து கொள்வார்கள். ஞாபக சக்தி உடையவர்கள். ஒழுக்கம் மிகுந்தவர்கள்.
இவர்கள் அரசியல் மற்றும் கலைத்தொழில் புரிவார்கள். எந்தத் தொழில் புரிந்தாலும் அதில் ஆராய்ச்சி மனப்பான்மை உடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக