Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

Airtel 3G ஷட் டவுன்: சேவையை தொடர என்ன செய்ய வேண்டும்??




ர்நாடக மாநிலத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவை மேலும் சில மாநிலங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  

இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதலிடத்தில் உள்ள ஜியோவை சமாளிக்க ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இந்த முயற்சிகள் எதுவும் பெரிதாய் கைக்கொடுப்பதாய் தெரியவில்லை.  
 
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக கொல்கத்தாவில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய நகரங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அதோடு, ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஏர்டெல்  3ஜி பயனர்கள் தங்களது சேவையை மீண்டும் பெற மொபைலை அப்டேட் செய்ய வேண்டும் அல்லது தங்களது சிம் கார்டை 4ஜி ஆக மேம்படுத்த வேண்டும் எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. 
 
மேலும், ஏர்டெல் 3ஜி சேவை  நாடு முழுவதும் மார்ச் 2020 க்குள் நிறுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏர்டெல் 2ஜி சேவை தொடரும் என்றும் ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக