Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

சர்ச்சை பேச்சு ..! நான் மன்னிப்பு கேட்க முடியாது – நடிகர் ரஜினிகாந்த்

சர்ச்சை பேச்சு ..! நான் மன்னிப்பு கேட்க முடியாது – நடிகர் ரஜினிகாந்த்


டிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று  பேசினார்.
ரஜினி இவ்வாறு பேசியது முதலே அவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இதன்விளைவாக ரஜினிக்கு மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது.ரஜினியின் வீட்டை வருகின்ற 23-ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்தனர்.
இதற்கு இடையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில் ,துக்ளக் விழாவில் நான் கற்பனையாக எதுவும் பேசவில்லை.1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், செருப்பு வீச்சு குறித்தும் கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. அதனால் மன்னிப்புக்கேட்க முடியாது. மறுக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல.மறக்கப்பட வேண்டிய ஒன்று.அவங்க பார்த்தை அவங்க சொன்னாங்க, நான் கேள்விப்பட்டத நான் சொன்னேன்.ராமர், சீதை ஆடையில்லாமல் ஊர்வலம் எடுத்து சென்றதாக Outlook india –இல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக