பிளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் இந்தியாவில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபால்கன் ஏர்புக் என்ற பெயரில் அறிமுகாகி
இருக்கும் இந்த லேப்டாப் மாடல் ஆனது சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள்
தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.
13.3-இன்ச் டிஸ்பிளே
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த
ஃபால்கன் ஏர்புக் மாடல் லேப்டாப் ஆனது 13.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன்
வெளிவந்துளளது. மேலும் மிக மெல்லியதாகவும், எடை குறைவாக உருவாகி இருக்கும்
ஃபால்கன் ஏர்புக் மாடலின் திரையில் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்டெல்
அதேசமயம் மைக்ரோசாஃப்ட் மற்றும்
இன்டெல் நிறுவனங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்
16.5எம.எம். அளவு மெல்லியதாக இருக்கிறது. அதன்பின்பு சிறந்த பாதுகாப்பு
அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த
ஏர்புக் லேப்டாப் மாடலில் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி
மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி
வழங்கப்பட்டுள்ளது.
37வாட் பேட்டரி
குறிப்பாக இந்த லேப்டாப் மாடலில்
37வாட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால்
லேப்டாப்பை ஐந்து மணி நேரங்கள் தொடர்ந்து பயன்டுத்த முடியும் என ப்ளிப்கார்ட் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்
மேலும் இந்தியாவில் ஃபால்கன் ஏர்புக்
லேப்டாப் மாடலின் விற்பனை வரும் ஜனவரி 17-ம் தேதி முதல் துவங்குகிறது, இந்த
ஃபால்கன் ஏர்புக் லேப்டாப் சாதனத்தின் விலை ரூ.39,990-ஆக உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
வால்மார்ட்
ஆனால் கடந்த ஆண்டு துவகத்தில்
ஒவர்பவர்டு என்ற பிராண்டிங்கில் கேமிங் சார்ந்த லேப்டாப்களை வால்மார்ட் அறிமுகம்
செய்தது, இருந்தபோதிலும் ஹார்டுவேரில் ஏற்பட்ட சில கோளாறுகள் மற்றும் விலை காரணமாக
இவற்றின் விற்பைன நிறுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக