>>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 27 ஜனவரி, 2020

    உங்க இதய ரேகைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

     Image result for உங்க இதய ரேகைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?"
    னிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளிலும் பல அர்த்தங்கள் மறைந்துள்ளது. அதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரேகைகள் இரு கைகளிலும் அமைவதில்லை. அப்படி பார்க்கும் போது ஒரு சிலரின் கைகளில் இருக்கும் இதய ரேகைகள் மட்டும் ஒரே அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

    அப்படி இருந்தால், அவர்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என்றே சொல்லாலம். ஆனால் இது மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்கும் சமமாக அமையாது.

    இதய ரேகை என்பது இதய ஆரோக்கியத்தை குறிப்பது அல்ல. அதன் அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு, ஒருவரது காதல் மற்றும் திருமண வாழ்க்கையை குறிப்பதாகும்.

    எது இதயரேகை?

    கையில் உள்ள முக்கிய ரேகைகளில் ஒன்று தான் இதய ரேகை. இந்த ரேகை சுண்டு விரலின் கீழே ஆரம்பமாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலை நோக்கி சென்றவாறு இருக்கும்.

     இதய ரேகையை வைத்தும் கூட ஒருவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும், அவர் மற்றவரிடம் எப்படி பழகுவார், அவரது லட்சியம், மனப்பான்மை, மக்கள், சமூகம் மீதான பார்வை எப்படி இருக்கும் என கூற முடியுமாம். இந்த வகையில் உங்களது இதய ரேகை என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்........

    இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால்....

    நம்முடைய வலது மற்றும் இடது கைகளை ஒன்றாக வைக்கும் போது நம் கையை இணைக்கும் இதய ரேகைகள் ஒரே மாதிரி சம அளவில் இருந்தால், அவர்களுக்கு துணையாக வருபவர்கள், மிகுந்த அன்புடனும், நன்கு புரிந்து கொள்பவராகவும், அனுசரித்து நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

    வலது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்....

    இடது கையை விட வலது கையின் இதய ரேகை உயராமாக இருந்தால், அவர்களுக்கு அமையும் துணை மிகவும் நல்லவராக இருப்பார். மேலும் இவர்கள் தன் இதயம் சொல்வதை மட்டுமே செய்வார்கள். இதனால் இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களின் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள்.

    இடது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்....

    வலது கையை விட இடது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால் அவர்கள் கொஞ்சம் கோபகாரர்களாகவும், சுதந்திரமாகவும் இருக்க விரும்புவார்கள். மேலும் இவர்களுக்கு வரும் துணையின் மூலமாக வாழ்க்கை முழுமை அடையும். இவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். மற்றவர்களை எளிதில் தன்வசமாக்கி கொள்வார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக