சென்னை தாம்பரம் - வேளச்சேரி இடையே லைட் ரயில் என்கிற
இலகு ரக ரயில் சேவை தொடங்கப்படும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில்
உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை மெட்ரோ ரயில்
போக்குவரத்திற்கான முதற்கட்ட பணியில் திருவொற்றியூர் - விம்கோ இடையேயான மெட்ரோ
ரயில் நீட்டிப்பு பணிகள் 2020ம் ஆண்டு மத்தியில் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட மெட்ரோ வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் 52.01 கி.மீ நீளத்திற்கு நடைபெறவுள்ளது. இதற்காக ஜப்பான் பன்நாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவி அளித்திட ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்நிலையத்திற்கு மீதமுள்ள கட்டுமானங்களுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வாங்கி ஆகியவற்றின் மூலம் நிதியுதவி பெற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது உரையில் சென்னையின் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமையவுள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோ வழிதடத்தை நீட்டித்திட அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை நீடிக்கப்பட்ட வழித்தடமாக இது அமையவுள்ளது.
இதனுடன் தாம்பரம் - வேளச்சேரி இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர எல்.ஆர்.டி எனப்படும் லைட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய ரயில் போக்குவரத்து முறை 15.5 கி.மீ வரை அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
லைட் ரயில் வழித்தடத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை தயாரித்திடும் பணிகள் விரைவில் தொடங்கும் என ஆளுநர் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்டார்.
Light Rail Transit என்கிற ஆங்கிலச் சுருக்கம் தான் LRT. டிராம் வாகனங்களை போல காட்சியளிக்கும் இந்த ரயில்கள், அவற்றை விட பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்றிருக்கும். சாலைகளிலும் உயர் நிலை மேம்பாலங்கள் வழியாகவும் இதனை இயக்கிட முடியும்.
மெட்ரோ ரயில்களை விட குறைவான வேகத்தில் இயக்கப்படும் என்பதால், இதற்கான நிலையங்களை ஏற்படுத்திட பெரிய சிரமங்கள் இருக்காது. மேலும் மெட்ரோ ரயில்கள் அளவுக்கு இதற்கான கட்டுமான பணிகள் பெரியளவில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்.ஆர்.டி ரயில்கள் பிலிஃப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் எல்.ஆர்.டி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் பரிசோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டு, தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக