Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 9 ஜனவரி, 2020

ஈராக்: கிரீன் ஜோனில் ராக்கெட் தாக்குதல், அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரான்!

 

ரான் மக்களின் கதாநாயகன் காசிம் சுலைமானி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியை ஈரான் வழங்கி வரும் சூழலில், “ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இறுதி உயிர் பிரியும் வரை, இந்த தாக்குதல் தொடரும்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஈரான் கிரீன் ஜோனில் 2 ராக்கெட் தாக்குதல் நேற்று இரவு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால், ஈராக்கில் உள்ள அனைத்து தூதரகங்களும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கத்தில் பல ஆண்டுகளாக ஈரானுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த அமெரிக்கா, போர் வேண்டும் என்ற நோக்கத்தோடு காசிம் சுலைமானியை கொன்றுள்ளது எனச் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஈரான் கடும் கண்டனத்தைத் தெரிவித்த ஈரான், காசிம் படுகொலைக்கான உரியப் பதிலை அமெரிக்கா விரைவில் பெறும் என்றும் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கை, சுலைமானியின் இறுதி ஊர்வலம் நிறைவடைந்த சில மணி நேரத்தில் செயலாக வெளிப்பட்டது.
 
ஈராக் ராணுவ முகாம்களை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கப் படைகள் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நிகழ்த்தியது. ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் சிக்கி 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக ஈரான், தெஹ்ரானில் உள்ள சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் தொடர்ந்து நேற்று இரவு ஈராக் கிரீன் ஜோன் பகுதியில் 2 ராக்கெட் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளதாக கருதப்பட்டது.

இந்த தாக்குதலில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. அமெரிக்க படைகள் ஈரானை விட்டு இப்போதும் வெளியேறாமல் இருக்கும் இந்த சூழலில், ஈராக்கில் உள்ள அனைத்து தூதரகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நடத்தப்பட்ட இந்த ராக்கெட் தாக்குதலுக்கும் முந்தைய தாக்குதலுக்கு 24 மணி நேர இடைவெளி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஈரானியர்கள் கூறுகையில், “அமெரிக்க ராணுவ படையினருக்கு: நாங்கள் எடுத்திருக்கும் இந்த பதிலடியை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களில் இறுதி நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும்” எனக் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக