Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 9 ஜனவரி, 2020

தர்பார் விமர்சனம்

 Image result for தர்பார் விமர்சனம்"
தித்யா அருணாச்சலம்(ரஜினிகாந்த்) மும்பை மாநகரில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பிரச்சனையை தீர்க்க அங்கு அனுப்பப்படுகிறார். போலீஸ் கமிஷனராக இருந்தாலும் சட்டப்படி மட்டுமே நடக்கும் ஆள் இல்லை இந்த ஆதித்யா. சட்டத்தை மீறுகிறீர்களே என்று கேட்கும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்களையே மிரட்டுகிறார் ஆதித்யா அருணாச்சலம்.

பெரிய தொழில் அதிபரின் மகனான போதைப் பொருள் சப்ளை செய்யும் அஜய் மல்ஹோத்ராவை(பிரதீக் பாபர்) பிடிக்கிறார் ஆதித்யா. அஜய்யை ஒழித்த பிறகு 27 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரை காமெடி பீஸாக்கிய பயங்கரமான கேங்ஸ்டரான ஹரி சோப்ரா(சுனில் ஷெட்டி) பழிவாங்க நாடு திரும்பி ஆதித்யா மற்றும் அவரின் மகள் வள்ளியை(நிவேதா தாமஸ்) குறி வைக்கிறார்.

முருகதாஸின் முந்தைய படங்களான ரமணா, துப்பாக்கி போன்று இந்த படத்திலும் நீதி கிடைக்க ஹீரோ சட்டத்தை தன் கையில் எடுக்கிறார். பேட்ட படத்தை பார்த்த முருகதாஸ் தர்பாரில் ரஜினியை மிகவும் இளமையாக காட்டியுள்ளார். ரஜினியின் எனர்ஜி, ஸ்டைலை பயன்படுத்தி ரசிக்கும்படியான ஆக்ஷன், டிராமா கலந்த கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார்.
 
படத்தின் பலமே ரஜினி, நிவேதா தாமஸ் இடையே பாசக் காட்சிகள் தான். அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் நிவேதா தாமஸின் நடிப்பு அருமை. என்ன தான் மேக்கப் போட்டாலும் ரஜினியின் நிஜ வயது திரையில் தெரிகிறது.

ஆதித்யா, லில்லி(நயன்தாரா) இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. நயன்தாராவுக்கு படத்தில் வேலையே இல்லை, பெயருக்கு இருக்கிறார். மேக்கப் கலைஞர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளபோதிலும் ஒரு காட்சியில் நயன்தாரா, ரஜினி இடையேயான நிஜ வயது வித்தியாசம் தெரிகிறது.

ஹரி சோப்ராவுக்கு பயங்கரமாக பில்ட்அப் கொடுத்தாலும் சொத்தையான வில்லனாக தெரிகிறார். வில்லன் என்பதால் பலரை கொலை செய்கிறார். ஆனாலும் ரசிகர்களை கவரவில்லை. அவருக்கும், ரஜினிக்கும் இடையேயான மோதல் காட்சி வலுவில்லாமல் உள்ளது. ஹீரோ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே வில்லனை சொத்தையாக வைத்தது போன்று உள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக