Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 9 ஜனவரி, 2020

'நீ எனக்கு மட்டும் தான்'... கேரள பள்ளி மாணவி பொள்ளாச்சியில் படுகொலை..!

ர்ணாகுளத்தைச் சேர்ந்த மாணவியை படுகொலை செய்து விட்டு பொள்ளாச்சி மலைப்பகுதியில் வீசி சென்ற மெக்கானிக்கை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி : பள்ளி மாணவியை பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதாக கூறி கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்ப முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் எர்னாகுளத்தை சேர்ந்தவர் கோபிகா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சபீர் (26) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

பள்ளி படிப்பை முடித்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என சபீர் கோபிகாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவி மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாகவும், திருமணம் செய்ய இயலாது எனவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சபீர் மாணவியுடன் சமாதானமாக பேசி, தான் வேலை செய்யும் ஷெட்டில் சர்வீஸ்க்கு விடப்பட்டிருந்த காரை எடுத்துக்கொண்டு மாணவியை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அந்த நாளில் மாணவி பள்ளிக்கு செல்லவில்லை. இருவரும் சாலக்குடி வழியாக வால்பாறைக்கு சென்றுள்ளனர்.

 அங்கு தங்குவதற்கு அறை எடுத்த இருவரும் பல இடங்களில் சுற்றியுள்ளனர். இதற்கிடையில் சபீர் திருமணத்தை குறித்து மீண்டும் மாணவியிடம் விவாதித்துள்ளார். அப்போதும் மாணவி அதற்கு உடன்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீர் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வரட்டுப்பாறை அருகே அவரது உடலை வீசி விட்டு தப்பியுள்ளார்.

அப்போது கடம்பாறை அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழக போலீசார் சபீரின் காரை மடக்கி சோதனை செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கஸ்டடியில் வைத்து விசாரித்தனர்.

பிறகு போலீசாருக்கு சபீர் மாணவியை கொலை செய்த சம்பவம் தெரிய வந்ததையடுத்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வரட்டுப்பாறையில் கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றினர். பின்னர் இதுகுறித்து தமிழக போலீசார், எர்ணாகுளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் கைதாகியுள்ள சைபீரிடம் இரு மாநில போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக